தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையின் முதல் சுற்று நிலவரப்படி பாஜக ஒரு இடத்தில் முன்னிலை வகித்து வருகிறது.
தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம் மற்றும் அசாம் ஆகிய 5 மாநிலங்களுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று பரபரப்பாக நடைபெற்று வருகிறது. காலை 8 மணி முதலே வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. வாக்கு எண்ணும் பணியில் 16 ஆயிரத்துக்கும் அதிகமானோர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தற்போதை வெளியான முதல் சுற்று நிலவரப்படி திமுக 132 இடங்களிலும், அதிமுக 101 இடங்களிலும் முன்னிலை பெற்று வருகின்றன. அதேபோல் மக்கள் நீதிமய்யம் ஒரு இடத்தில் முன்னிலை வகித்து வருகிறது. அதில், கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட அந்த கட்சியின் தலைவர் கமல்ஹாசன் முன்னிலை வகித்து வருகிறார்.
அதேபோல் தாராபுரம் தனித் தொகுதியில் போட்டியிட்ட பாஜக தலைவர் எல். முருகன் முன்னிலையில் உள்ளார். இன்னும் அடுத்தடுத்த சுற்றுக்களின் முடிவுகளில் எந்த கட்சி எத்தனை தொகுதிகளில் முன்னிலை வகிக்கும் என மக்கள் ஆர்வமாக காத்துள்ளனர்.