'கொஞ்ச நாள் அமைதியா இருந்தாரு'... 'ஒரே ஒரு போட்டோவை போட்டு பரபரப்பை கிளப்பியுள்ள நித்தியானந்தா'... கொந்தளித்த பக்தர்கள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சமூக வலைத்தளங்களில் எப்போது களமிறங்கினாலும் ட்ரெண்டிங் டாப்பிக்காக மாறிவிடுகிறார் நித்தியானந்தா.

பெரும் சர்ச்சைக்கும், பரபரப்புக்கும் சொந்தக்காரர் தான் நித்தியானந்தா. பாலியல் வன்கொடுமை வழக்கு உட்பட்ட பல கிரிமினல் வழக்குகளில் தேடப்படும் குற்றவாளியாக இருக்கும் நித்தியானந்தா கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கியுள்ளதாகவும், தனது நாட்டுக்கான நாணயங்களை வெளியிட்டுள்ளதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
அதற்கெல்லாம் ஒரு படி மேலே சென்று கைலாசா நாட்டில் தொழில் தொடங்கவும் அழைப்பு விடுத்தார். அவ்வப்போது புதுப்புது வீடியோக்களை வெளியிட்டு சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகும் நித்தியானந்தா தற்போது ஒரு புகைப்படம் மூலம் மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளார். ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் திருப்பதி ஏழுமலையான் போல் காட்சியளிக்கிறார்.
பகவான் வெங்கடேஸ்வரரின் மங்களகரமான ஆசீர்வாதங்களையும் அருளையும் பெற்று உங்கள் நிதி நெருக்கடிகளிலிருந்து வெளிவாருங்கள், செல்வம் ஏராளமாகப் பெருகும் என்று அவர் பதிவிட்டுள்ளார். சிவனாக, கால பைரவராகக் காட்சி அளித்த நித்தியானந்தா தற்போது திருப்பதி ஏழுமலையானாகவே மாறி பக்தர்களுக்குக் காட்சி அளிக்கிறார் என நெட்டிசன்கள் பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
அதேநேரத்தில் திருப்பதி ஏழுமலையான் பக்தர்கள் மத்தியில் இந்த புகைப்படம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
