"அது எப்படி அவரு 'ஹோட்டல்' கட்ட பெர்மிஷன் கேக்கலாம்"??,,. 'நித்தி'க்கு லெட்டர் எழுதியவர் மீது 'புகார்'!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நித்தியானந்தா கைலாசா என்னும் நாட்டை உருவாக்கியிருப்பதாகவும், அந்த நாட்டிற்கான நாணயங்கள், வங்கி மற்றும் அதன் கொள்கைகள் உட்பட பல தகவல்களை அவர் சமீபத்தில் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், மதுரை டெம்பிள் சிட்டி உணவகத்தின் உரிமையாளர் குமார், தங்களது உணவகத்தின் கிளை ஒன்றை கைலாசாவில் திறக்க நித்தியானந்தா அனுமதி தர வேண்டுமென கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். இதற்கு நித்தியானந்தாவும், கைலாசாவிற்கு அங்கீகாரம் கிடைத்ததும், தங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என பதில் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து, டெம்பிள் சிட்டி குமார் இந்திய அரசுக்கு எதிராக செயல்பட்டது மட்டுமல்லாமல், அரசால் தேடப்படும் குற்றவாளியான நித்தியானந்தாவிற்கு ஆதரவு தருவது போல் செயல்பட்டதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென மதுரையை சேர்ந்த சமூக ஆர்வலர் முத்துக்குமார் மாவட்ட ஆட்சியரிடமும், மாநகர காவல் ஆணையரிடமும் புகார் மனு அளித்துள்ளார்.

மற்ற செய்திகள்
