‘அன்னைக்கு சென்னையில் நிலஅதிர்வு’.. இப்போ திடீர்னு அந்த ஊர்ல 2 கி.மீ தூரத்துக்கு ‘கடல்’ உள்வாங்கியிருக்கு.. சுனாமி பீதியில் மக்கள்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஅந்தர்வேதியில் கடல் 2 கிலோமீட்டர் தொலைவிற்கு உள்வாங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம், அந்தர்வேதி கடற்கரையில் விசித்திரமான சூழல் நிலவியது. அந்தர்வேதி கடற்கரை என்பது கோதாவரி ஆறு வங்க கடலில் கலக்கும் இடமாகும். இங்கு கடந்த சில நாட்களாக கடல் முன்னோக்கி வந்தபடியே உள்ளது. தொடர்ந்து அலைகள் பயமுறுத்தும் வகையில் எழுச்சியுடன் வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று திடீரென சுமார் 2 கிலோமீட்டர் தொலைவிற்கு கடல் உள்வாங்கி பின்னோக்கிய நிலையில் அலைகள் இருந்தன. கிழக்கு கோதாவரி மாவட்ட கடற்கரையில், கடந்த சில நாட்களாகவே அலைகள் தொடர்ந்து முன்னோக்கியும், சில இடங்களில் பின்னோக்கியும் செல்வதால் பொதுமக்கள், மீனவர்கள் பீதியடைந்துள்ளனர்.
வழக்கமாக கடல் அலைகள் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் முன்னோக்கி செல்லும். அதன்படி, நேற்றுமுன்தினம் 45 மீட்டருக்கு முன்னோக்கி வந்தது. ஆனால் வழக்கத்துக்கு மாறாக நேற்று கடல் 2 கிலோமீட்டருக்கு உள்வாங்கியதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சமீபத்தில் வங்கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதனால் சென்னையில் பல்வேறு பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டது. இந்த நிலையில் ஆந்தராவில் கடல் உள்வாங்கியுள்ளதால், மக்கள் மத்தியில் சுனாமி அச்சம் எழுந்துள்ளது. அதனால் இந்த மாற்றங்கள் தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.