'இது ஒரு சாதாரண பொருளா தெரியல...' 'எனக்கென்னமோ டவுட்டா இருக்கு...' 'வலையில் சிக்கிய மர்மப்பொருள்...' - 'செக்' பண்ணி பார்த்தப்போ காத்திருந்த அதிர்ச்சி...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சபரிநாதன் என்னும் இளைஞர் நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணியை அடுத்துள்ள செருதூர் மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர்.

சபரிநாதன் மற்றும் அவரின் நண்பர்கள் நான்கு பேரும் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். அப்போது, வேதாரண்யத்திற்கு கிழக்கே சுமார் 8 நாட்டிக்கல் கடல் மைல் தூரத்தில் மீன் பிடித்துக்கொண்டிருந்துள்ளனர்.
அந்நேரத்தில் அவர்களது வலையில் விலாங்கைப் போல இரும்பாலான மர்ம பொருள் ஒன்று சிக்கியுள்ளது. இது ஒரு சாதாரண இரும்பு பொருளாக தெரியவில்லை என அதிர்ச்சியடைந்த சபரிநாதன் மற்றும் அவரின் நண்பர்கள் உடனடியாக கரைக்குத் திரும்பியவர்கள் கிராம பஞ்சாயத்தாரிடம் கடலில் கிடைத்த மர்ம பொருளை ஒப்படைத்து உள்ளனர்.
அதன்பின் கிராம பஞ்சாயத்தாரிடம் கொடுத்த தகவலின்பேரில், கீழையூர் கடலோரக் காவல் குழும போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு செய்ததில், மீனவர்களின் வலையில் சிக்கியது ராக்கெட் லாஞ்சர் என்பது தெரியவந்தது.
மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், ராக்கெட் லாஞ்சரைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராக்கெட் லாஞ்சர் மீனவர்கள் வலையில் சிக்கிய சம்பவம் நாகை மீனவர்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
