அப்போ நான் 'உயிரோட' திரும்ப மாட்டேனா...? 'நடுக்கடலில் மூழ்கத் தொடங்கிய படகு...' - 69 வயது முதியவர் எடுத்த ரிஸ்க்...!
முகப்பு > செய்திகள் > உலகம்ஜப்பான் நாட்டில் ஒரு நாள் முழுவதும் கடல் நீரில் தத்தளித்து கொண்டிருந்த 69 வயது முதியவர் மீண்டு வந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜப்பான் நாட்டில் கடந்த சனிக்கிழமை அன்று 69 வயதான முதியவர் ஒருவர் தென் மேற்கு ககோஷிமா மாகாணத்தில் இருந்து யகுஷிமா தீவுக்கு படகு ஒன்றில் தனியாக பயணித்துக் கொண்டிருந்தார்.
அப்போது, துரதிஷ்டவசமாக நடுக்கடலில் படகு மூழ்கத் தொடங்கியுள்ளது. உடனடியாக சுதாரித்து கொண்ட அந்த முதியவர் தீவில் இருந்த அவருடைய நண்பர் ஒருவருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த நண்பரும் முதியவரின் நிலை குறித்து மீட்புப்படையினருக்கு தகவல் அளிக்கவே மீட்புப்படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
முதியவர் பயணம் செய்த கப்பல் நேரம் ஆக ஆக மூழ்கிய நிலையில் அவர் படகில் இருந்த எஞ்சினை பற்றிக் கொண்டு மட்டும் இருந்துள்ளார்.
மேலும், சுமார் 22 மணி நேரம் கடல் நீரில் தத்தளித்து கொண்டிருந்த முதியவர் தன்னுடைய உடலுக்கு தேவையான வெப்பத்தை கடத்தும் வகையில் பிளாஸ்டிக் ஷீட்டை தன் உடலைச் சுற்றிக்கொண்டு இருந்துள்ளார்.
இதனால் தான் 69 வயதாகி இருந்தாலும் அவர் உயிர் தப்பியுள்ளார் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கிட்டத்தட்ட ஒருநாள் வரை தேடி அவர் இறந்து விட்டார் என்ற எண்ணத்திற்கு வந்த குடும்பத்தாருக்கும் அதிர்ச்சியளிக்கும் வகையில் முதியவர் மீண்டு வந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார்.

மற்ற செய்திகள்
