'எங்க இருந்து வந்துச்சுன்னே தெரியல...' ஒருவேளை அதுவா இருக்குமோ...?! - கடற்கரையில் விழுந்த உலோக பந்து...!
முகப்பு > செய்திகள் > உலகம்வெளிநாட்டு கடற்கரை ஒன்றில் மர்மமான பெரிய உலோக பந்து கண்டெடுக்கப்பட்ட சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த பிப்ரவரி 24 அன்று ஹார்பர் தீவில் உள்ள பஹாமா ஒரு கடற்கரையில் சுமார் 41 கிலோகிராம் எடையுள்ள ஒரு டைட்டானியத்தாலான பந்து கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டிஷை சேர்ந்த மனோன் கிளார்க் என்பவர் தான் முதலில் இதைக்கண்டு அங்கிருந்தவர்களிடம் தெரிவித்துள்ளார். அதையடுத்து இந்த உலோக உருண்டையை ஆராய்ச்சி செய்கையில் இது ஒரு விண்கலத்தின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்று நிபுணர்கள் நம்புகிறார்கள்.
மேலும் விண்வெளி வல்லுநர்கள் இது ஒரு செயற்கைக்கோள் அல்லது விண்கலத்திலிருந்து வந்திருக்கலாம் என்று நம்புகிறார்கள்.
மேற்பரப்பில் உள்ள ரஷ்ய உரை, பொருளின் இயக்க வெப்பநிலை வரம்பை -170 and C மற்றும் -196 ° C மற்றும் சுமார் 43 லிட்டர் கொள்ளளவு கொண்டது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.