பார்க்க எவ்ளோ கியூட்டா இருக்கு...! 'ஆனா இது மீன் இல்ல...' - வலையில் சிக்கிய அரிய வகை உயிரினம்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மீனவர்கள் விரித்த வலையில் கடல் பசுவை மீட்ட மீனவர்கள் உரிய சிகிச்சையளித்து கடலுக்குள் மீண்டும் விட்ட சம்பவம் புதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் மணல்மேல்குடி மீனவர் கிராமத்தில் உள்ள மீனவர்கள் விரித்த வலையில் கடல் பசு சிக்கியுள்ளது. தமிழகத்தில் தூத்துக்குடி முதல் ராமநாதபுரம் வரை பரந்து விரிந்துள்ள மன்னார் வளைகுடா கடல் பகுதியில் அரிய வகை கடல்வாழ் உயிரினங்களின் சொர்க்கப்பகுதியாக திகழ்கிறது. மன்னார்வளைகுடாவில் மட்டும் 3, 600-க்கும் மேற்பட்ட அரிய வகை கடல்வாழ் உயிரினங்கள் வாழ்ந்துவருகின்றன.
அரியவகை உயிரினங்களில் கடல் பசுக்களும் ஒன்று. இத்தகைய கடற்பசுக்கள் 200-க்கும் குறைவான எண்ணிக்கையிலேயே உள்ளன. அதன்காரணமாக புதுக்கோட்டை மாவட்டம் மணல்மேல்குடி மீனவர் விரித்த வலையில் சிக்கிய அழகிய குட்டி கடல் பசுவை மீனவர்கள் ஆசுவாசப்படுத்தி மீண்டும் கடலுக்குள் விட்டனர். தொடர்ந்து, கடல் பசு துள்ளி குதித்தபடி கடலுக்குள் நீந்தி சென்ற சம்பவம் அனைவரையும் மகிழ செய்துள்ளது.

மற்ற செய்திகள்
