‘சாக்கடையில் கிழிந்தும் கிழியாமலும்’... யாரோ போட்டுவிட்டுச் சென்ற 12 ஆயிரம் ரூபாய்!... ‘ஆனா அதுல ஒரு ட்விஸ்ட்!’
முகப்பு > செய்திகள் > தமிழகம்கிழிக்கப்பட்ட பழைய ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் கடலூர் சாக்கடையில் கிடந்துள்ளன. அவற்றைக் கைப்பற்றி காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

கடலூர் புதுப்பாளையம் பகுதியில் உள்ள நபிகள் நாயகம் தெருவில் உள்ள மூன்று தெருக்களில் சாக்கடைகள் தேங்கி இருந்துள்ளன. அங்குதான் பழைய ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் கொஞ்சம் கிழிக்கப்பட்டும், கொஞ்சம் கிழிக்கப்படாமலும் இருந்ததை அவ்வழியாக சென்ற மக்கள் பார்த்து அதிர்ந்துள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த கடலூர் புதுநகர் காவல் ஆய்வாளர் உதயகுமார் தலைமையிலான காவலர்கள், அங்கு கிடந்த ரூ.12 ஆயிரம் பணத்தை சேகரித்து, வழக்குப்பதிவு செய்துள்ளன.
அத்துடன் பழைய ஆயிரம் ரூபாய் நோட்டை மாற்றுவதற்கு முடியாமல் பணமதிப்பிழப்பு காலத்தில் பதுக்கி வைத்திருந்தவர்கள், இப்போது அதனை யாருக்கும் தெரியாமல் இருக்க இப்படி கிழித்து சாக்கடையில் போட்டிருக்கலாம் என கூறியுள்ளனர்.

மற்ற செய்திகள்
