'இனி தங்கம் கடல்ல மிஸ் ஆக வாய்ப்பில்ல...' 'கடலுக்கடியில தங்கம் தொலையாம இருக்க எடுத்த முன்னெச்சரிக்கை...' - கடலில் அரசியல் கட்சி பிரமுகர் செய்த 'தங்க' நீச்சல்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்அரசியல் கட்சி பிரமுகரான ஹரி நாடார் என்னும் ஹரி கேரளாவில் தங்க நகைகளுடன் கடலுக்குள் சென்று வந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது.

உடல் முழுவதும் நகை போட்டுக்கொண்டு நடமாடும் நகைக்கடையாக வலம் வரும் பனங்காட்டுப்படை கட்சியின் ஆலங்குளம் வேட்பாளர் ஹரிநாடார் என்னும் ஹரி கடந்த சில தினங்களுக்கு முன் கேரளாவிற்கு விமானம் மூலம் செல்லும் போது வருமானவரித் துறையினரிடம் சிக்கி, வரிப்பணத்திற்கான தொகையை செலுத்தி வெளியே வந்தார்.
அதன் பின் கேரளாவில் இருந்த ஹரி ஆழ்கடலுக்குள் செல்ல முயன்றுள்ளார். எப்போதும் கிலோ கணக்கில் தங்க நகைகளை சுமந்து செல்லும் அவர் ஆழ்கடலுக்கு போகும் போதும் அதை கழட்ட விரும்பவில்லை.
அதன் காரணமாக கழுத்தில் அணிந்திருந்த மொத்த தங்க சங்கிலிகளையும் சேர்த்து பிளாஸ்டிக் டேக் கொண்டு இறுக்கமாக கட்டியுள்ளனர். அதே போல அவர் கையில் அணிந்திருந்த தங்க அட்டிகைகளையும் கையுடன் சேர்த்துக் கட்டியுள்ளனர். அதன் பின்னர் நீச்சல் உடை அணிந்து ஆக்சிஜன் சிலிண்டருடன், ஆழ்கடலுக்குள் இறங்கி பயிற்சியாளர் உதவியுடன் நீந்தியுள்ளார் ஹரி.
மூன்றரை கிலோ நகைகளுடன் கடலுக்குள் நீச்சல் அடித்த ஹரி கடலின் அழுத்தம் காரணமாக நீண்ட நேரம் அவரால் கடலுக்குள் நீந்த இயலவில்லை என்று கூறப்படுகின்றது.
இந்த சம்பவம் குறித்தான வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் பரவி வைரலாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
