'தமிழகத்தில் மேலும் 50 பேருக்கு கொரோனா!'.. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6ஆக உயர்வு!'

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Apr 06, 2020 06:34 PM

தமிழகத்தில் மேலும் 50 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

coronavirusupdate new cases found in TN கொரோனா பாதித்தவர்கள் விபரம்

முன்னதாக தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 571 ஆக இருந்த நிலையில், இன்றைய தினம் மேலும் 50 பேருக்கு கோரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் உறுதிப்படுத்தியுள்ளார். இவர்களுள் 48 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தவிர, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திருச்சியைச் சேர்ந்த 57 வயதுடைய பண்மணி மூச்சுத்திணறலால் உயிரிழந்துள்ளார். இதனால் தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு ஆளாகி, உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6-ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 110-ஆக உயர்ந்துள்ளது.