“தமிழகத்தில் மேலும் 50 பேருக்கு கொரோனா உறுதி!”.. “முதல் முறையாக அதிக எண்ணிக்கை!”.. பாதிக்கப்பட்டோர் 124 ஆக உயர்வு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Mar 31, 2020 08:12 PM

தமிழகத்தில் மேலும் 50 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலர் அறிவித்துள்ளார். 

corona positive case found and announced by in TN Health officials

இவர்களுள் 45 பேர் டெல்லி நிஜாமுதீன் மாநாட்டில் பங்கேற்றதாகவும், அந்த மாநாட்டில் பங்கேற்ற 1,131 பேரில் 515 பேர் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ளவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. அங்கிருந்த பலருக்கு கொரோனா அறிகுறிகள் இருந்ததாக வெளியான தகவல்களின் அடிப்படையில் அவர்கள் பரிசோதிக்கப்பட்டதாக தெரிகிறது. 

மேலும் இந்த மாநாட்டில் வெளிநாட்டவர்கள் பலர் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே 74 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், தற்போது தமிழகத்தில் கொரோனாவால்

பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 124 ஆக உயர்ந்துள்ளது. இவ்வளவு பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதிசெய்துள்ளார். மேலும் இதில் 5 பேர் கன்னியாகுமரியிலும், 23 பேர் திருநெல்வேலியிலும், 4 பேர் சென்னையிலும், 18 பேர் நாமக்கலிலும் உள்ள மருத்துவமனைகளில்

அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.