ஏடிஎம்-ல பணம் திருட வரல.. இது வேற பிளான்.. மெக்கானிக் என திருடர்கள் உள்ளே நுழைந்து.. விசாரணையில் தெரிய வந்துள்ள ஷாக் தகவல்கள்
முகப்பு > செய்திகள் > தமிழகம்கோவை: கோவை ஏடிஎம்களில் பேட்டரி திருட்டு போன சம்பவங்களில் கைது செய்யப்பட்ட திருடர்கள் போலீசார் அதிரும் வகையில் வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.

திருடன் வகுத்த சதித்திட்டம்:
கோவை பகுதியில் இயங்கும் ஏடிஎம்களில் பேட்டரிகள் காணாமல் போகும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த திருட்டு குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் திருடன் வகுத்த சதித்திட்டம் போலீசாரையே ஆச்சரியப்பட வைத்துள்ளது.
பேட்டரி திருடனை பிடிக்க களம் இறங்கிய போலீசார்:
சில நாட்களுக்கு முன் வெரைட்டிஹால் பகுதி ஏடி.எம்.ஒன்றில் பேட்டரிகள் காணாமல் போனதில் வெரைட்டி ஹால் போலீசார் விசாரணை நடத்திவந்தனர். அதை தொடர்ந்து அதே நாளில் சிங்காநல்லூர் பகுதியிலும் பேட்டரி காணாமல் போனது. உடனடியாக சிங்காநல்லூர் போலீசார் பேட்டரி திருடனை பிடிக்க களமிறங்கினர்.
வங்கி அதிகாரிகள் தந்த புகார்:
ஒரே நாளில் அடுத்தடுத்து பேட்டரிகள் திருடுபோன சம்பவத்தால் போலீசார் ஏடிஎம்களில் விசாரணை நடத்தினர். மேலும், சிங்காநல்லூர் காவல் ஆய்வாளர் அருண்குமார் தலைமையிலான போலீசார் பேட்டரி காணாமல்போன வங்கி அதிகாரிகள் தந்த புகாரின் அடிப்படையில் புலனாய்வு செய்த நிலையில் செந்தில் குமார் என்ற நபரை கைது செய்தனர்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் போலீசார் அதிர்ந்து போகும் அளவிற்கு செந்தில் குமார் வாக்குமூலம் தந்துள்ளார். அப்போது, 'பேட்டரி திட்டுவதற்கு சாதாரணமாக சென்றால் போலிஸாரிடம் மாட்டிவிடுவோம். அதனால் நாங்கள் முதலில் பேட்டரி மெக்கானிக் போன்று ஒவ்வொரு இடங்களுக்கும் சென்று பட்டப்பகலிலேயே பேட்டரிகளை திருடுவோம்' எனக் கூறியுள்ளனர்.
நான் ஒரு மெக்கானிக்:
மேலும், 'பேட்டரிகளை கழட்டும்போது வாடிக்கையாளர்கள் கேட்டால் நான் மெக்கானிக் என்றும் பேட்டரியை சரிசெய்ய வந்து இருப்பதாகவும் தெரிவித்து லாவகமாக பேட்டரியை திருடி பழைய இரும்பு கடையில் விற்று விடுவோம்' எனவும் கூறியுள்ளனர்.
அதுமட்டுமில்லாமல், 'இரவு நேரங்களில் ஏ டி எம்களுக்கு சென்று பேட்டரி திருடினால் போலீஸ் வந்துவிடுவார்கள். அதனால் திருட்டு சம்பவத்தை பட்டப்பகலிலேயே செய்வோம். ஏனென்றால் ஏதாவது ஒரு பொருள் திருடப்பட்டால் திருடன் இரவில் தான் வருவான் என போலீசார் நினைப்பார்கள். அவர்களை ஏமாற்றவே நான் பட்டப்பகலில் மட்டுமே திருட செல்வேன்' எனவும் கூறியுள்ளார்.
பேட்டரிகளை மட்டுமே திருடி போலீசாரிடம் மாட்டாமல் இருக்க செந்தில்குமார் தீட்டிய ராஜ தந்திரங்கள் எல்லாம் தற்போது வீணாகியுள்ளது. கைது செய்யப்பட்ட செந்தில்குமார் சிங்காநல்லூர் போலீசார் பிடித்து சிறையில் அடைத்து துரித நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கின்றனர்.

மற்ற செய்திகள்
