3 பெண்களை தீர்த்து கட்டிய கும்பல்.. அப்பா மகனிடம் சொன்ன ஒற்றை வார்த்தை.. 50 வருசத்துக்கு பின் போலீசுக்கு கிடைத்த துப்பு..!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவில் 50 வருடங்களுக்கு முன்பு நடந்த 3 கொலைகளுக்கு பின்னால் இருந்த மர்மத்தை போலீசார் தற்போது கண்டுபிடித்து குற்றவாளியை கைது செய்திருப்பது அமெரிக்காவையே அதிர வைத்துள்ளது.
ஒரே மடக்கில் முழு பாட்டில் வோட்காவை காலி செய்த இளைஞர்.. அடுத்து நடந்ததுதான் செம்ம ஷாக்..!
3 கொலைகள்
அமெரிக்காவின் வடக்கு கரோலினா பகுதியில் 1972 ஆம் ஆண்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்களில் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளனர். இதனையடுத்து இந்த கொலைக்கான காரணம் மற்றும் குற்றவாளிகளை வடக்கு கரோலினா மாகாண காவல்துறையினர் தேடிவந்தனர். சுமார் 50 வருடங்களுக்கு நீடித்த இந்த வழக்கில் ஒரு முன்னேற்றமும் ஏற்படாததால் வழக்கு நிலுவையில் இருந்துவந்தது.
திடீர் திருப்பம்
இந்நிலையில், 2019 ஆம் ஆண்டு ஜார்ஜியா பகுதியில் வடுகா கவுண்டியில் ஒரு கொலை குற்றவாளியை அவருடைய மகன் சந்திக்கச் சென்றுள்ளார். அப்போது, அந்த தந்தை கூறிய வார்த்தைகளைக் கேட்டு மகன் மிரண்டு போயிருக்கிறார். மகனிடம் பேசிக்கொண்டிருந்த போது அந்த தந்தை சில ஆண்டுகளுக்கு முன்னர் தாங்கள் சில ஆண்டுகளுக்கு முன்பாக கரோலினா மலைப்பகுதியில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்களை கொலை செய்ததாக கூறியுள்ளார்.
தொடர் கொலைகள்
இதனையறிந்த வடுகா கவுண்டி போலீசார் இந்தத் தகவலை வடக்கு கரோலினா காவல்துறைக்கு தெரியப்படுத்தியிருக்கிறார்கள். இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் பில்லி டேவிஸ், பில்லி பிரட்,பாபி ஜீன்,டேவிட் ரீட் ஆகிய நான்கு பேர் 1970-களில் பல கொலைகளை செய்துள்ளது தெரியவந்துள்ளது.
அவர்கள் நான்கு பேர் சேர்ந்து செய்த கொலைகளில் இந்த மூன்று கொலைகளும் அடக்கம் என விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இந்த நபர்கள் தொடர்பாக காவல்துறையினர் விசாரித்துள்ளனர். அதில் டேவிஸ் தவிர மற்ற அனைவரும் தற்போது உயிரிழந்துள்ளதாகத் தெரிகிறது. மேலும், டேவிஸ் ஏற்கெனவே ஒரு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருவதும் தெரியவந்துள்ளது.
இதன்மூலம், ஒரு முன்னேற்றமும் இல்லாமல் 50 வருடங்களாக முடிக்கப்படால் இருந்த கொலை வழக்கினை முடித்து வைத்திருக்கின்றனர் வடக்கு கரோலினா காவல்துறை அதிகாரிகள்.
"பூணூல் போடுறத தடை செய்வீங்களா?".. ஹிஜாப் விவகாரத்தில் அமீர் எழுப்பிய சரமாரி கேள்விகள்..!