'சொல்லு எந்த ரூட்டு கெத்து'... 'அரை நிர்வாண கோலத்தில் மாணவன்' ... அதிர்ச்சி வீடியோ!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Jul 24, 2019 02:51 PM

எந்த ரூட்டு சிறந்தது என சொல்லச் சொல்லி மாணவன் ஒருவன் தாக்கப்படும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Which bus route is best Chennai college student attacked

சென்னையில் கல்லூரி மாணவர்களுக்கிடையே நிகழும் பிரச்சனை என்பது தற்போது பொதுமக்களுக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது. பிராட்வேயில் இருந்து பூந்தமல்லி நோக்கி சென்ற மாநகரப் பேருந்தில் பயணித்த பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கிடையே, ரூட்டு தல யார் என்பது குறித்து எழுந்த பிரச்சனை பெரும் மோதலாக வெடித்தது.

கல்லூரி மாணவர்கள் பட்டாக்கத்திகளை எடுத்துக் கொண்டு, மற்றொரு தரப்பை சேர்ந்த மாணவர்களை தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பேருந்து அரும்பாக்கத்தை அடைந்த போது நடந்த இந்த சம்பவத்தால் பேருந்துக்குள் இருந்த பயணிகள் அலறினர். இந்த தாக்குதலில் வசந்த் என்ற இரண்டாம் ஆண்டு மாணவருக்கு பலத்த வெட்டுக் காயம் விழுந்தது.

இதனிடையே பட்டப்பகலில் நடுரோட்டில் நடந்த இந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள், கல்லூரி மாணவரை அரை நிர்வாண கோலத்தில் தாக்கி 53 ரூட்டுக்கு ஜே என்று 108 முறை எழுதச்சொல்லி மிரட்டும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #COLLEGESTUDENTS #BUS ROUTE #STUDENTS FIGHT #ROUTE THALA #PACHAIYAPPA COLLEGE