'காசு இல்லைன்னா யாரும் மதிக்க மாட்டாங்க'... 'வாட்ஸ்ஆப்பில் ஸ்டேட்டஸ்'... இளைஞர் செய்த விபரீதம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Jeno | May 04, 2019 11:23 AM
வாட்ஸ்ஆப்பில் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம்,வடசென்னை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பரசுராமன் பகுதியில் வசித்து வருபவர் மன்சூர்.இவர் ராயபுரம் மாடல் லைன் பகுதியில், பக்கோடா கடையில் வேலை செய்து வந்துள்ளார்.இதனிடையே 2 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருடன் மன்சூருக்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.இந்நிலையில் கடந்த சில நாட்களாக சோகமுடன் காணப்பட்ட மன்சூர்,வியாழக்கிழமை இரவு வேலை முடிந்து வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அவரது நண்பர்களிடம் காசு இல்லைன்னா யாரும் நம்மை மதிக்கமாட்டார்கள் என விரக்தியுடன் கூறியுள்ளார்.இதையடுத்து நண்பர்கள் ஆறுதல் கூறி அனுப்பி வைத்துள்ளனர்.
இந்நிலையில் இரவு தூங்க சென்ற மன்சூர், காலையில் வெகுநேரமாக அறையில் இருந்து வெளியே வராததால் அவரின் அக்கா சுல்தானா சந்தேகமடைந்தார். இதையடுத்து கதவை தட்டிய அவரது உறவினர்கள்,மன்சூர் கதவை திறக்காததால் கதவை உடைத்து கொண்டு,உள்ளே சென்று பார்த்தனர். அப்போது மன்சூர், தனது தாயாரின் புடவையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ந்து போயினர்.
இதையடுத்து தகவலறிந்த காவல்துறையினர் மன்சூரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர்.இதையடுத்து மன்சூரின் செல்போனை கைப்பற்றி விசாரணை நடத்தியதில்,மன்சூர் இறப்பதற்கு முன், செல்போனின் வாட்ஸ் ஆப் ஸ்டேட்டசில் " என்ன வாழ்க்கைடா இது., காசு இல்லைன்னா யாரும் மதிக்க மாட்டுறாங்க, வாழ்க்கைக்கு குட்பை" என்று பதிவிட்டுள்ளதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.இந்நிலையில் மன்சூர் தற்கொலைக்கு முழுமையான காரணம் என்ன என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.