'யாருய்யா இவரு?'.. 'எனக்கே பாக்கணும் போல இருக்கு!'.. கிரிக்கெட் பிரபலத்திடம் ரசிகர் வைத்த 'விநோத' வேண்டுகோள்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Siva Sankar | Dec 01, 2019 10:32 AM

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ரிக்கி பாண்டிங்கிற்கு உலகம் முழுவதும் ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளமே இருக்கு நிலையில், கிரிக்கெட் ரசிகர் ஒருவர் விநோத சம்பவத்தை அரங்கேற்றியுள்ளார்.

Fan Requests ricky ponting to take him a photo with Hostess

அதன்படி ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ரிக்கி பாண்டிங்கிங் கைகளில் கேமரா போனை கொடுத்துவிட்டு, தொகுப்பாளினியுடன் ரசிகர் ஒருவர் புகைப்படம் எடுத்து தருமாறு கூறியுள்ள விநோதத்தைத்தான் இந்த ரசிகர் ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு மைதானத்தில் அரங்கேற்றியுள்ளார்.

ஆஸ்திரரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி, ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்று வந்த நிலையில், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ரிக்கி பாண்டிங்குடன், தொகுப்பாளினி மெக்காஃப்லீன் கலந்துரையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த ரசிகர் ஒருவர் தனது செல்போன் கேமராவை எடுத்தபடி ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டிருக்கிறார். ஆனால் அவர் கேட்டதோ தொகுப்பாளினியுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றுதான் என்பது சில நொடிகளுக்கு பின்னரே புரியவந்தது.

இதனை அடுத்து ரிக்கி பாண்டிங்கின் கையில் போனை கொடுத்து, தன்னை தனக்கு பிடித்த தொகுப்பாளினியான மெக்காஃப்லீனுடன் சேர்த்து ஒரு புகைப்படம் எடுத்து தரச் சொல்லியிருக்கிறார். ரிக்கி பாண்டிங்கும் உற்சாகத்துடன் அந்த ரசிகரின் வேண்டுகோளை நிறைவேற்றினார்.

Tags : #RICKY PONTING #PHOTO #HOSTESS