'க்ளீன் பண்றதுக்காக...' 'டாய்லெட் கதவ திறந்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி...' 'இது ஏர்போர்ட்டுக்கு உள்ள எப்படி வந்துச்சு...' - கோவையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனா தொற்று பரவ காரணமாக கோவை விமான நிலையத்தில் சர்வதேச விமானங்கள் குறைந்தளவே இயக்கப்படுகின்றன. இதனால் பயணிகளின் வரத்தும் குறைவாகவே உள்ளது.

இந்த நிலையில், விமான நிலையத்தின் உள்நாட்டு விமானங்கள் புறப்படும் டெர்மினல் அருகேயுள்ள ஆண்கள் கழிவறையில் தூய்மை பணியாளர் ஒருவர் தூய்மை பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது கழிவறையின் உட்பகுதியில் துப்பாக்கித் தோட்டாக்கள் கிடப்பது கண்டு கடும் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் உடனே விமான நிலைய அதிகாரிகளிடம் தெரிவித்தார். அங்கு சென்ற மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் தோட்டாக்களை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில் ஒரு எஸ்.எல்.ஆர் தோட்டாவும், மூன்று 9 எம்.எம் தோட்டாக்களும், இரண்டு போலியான தோட்டாக்களும் இருந்து தெரியவந்தது. இது தொடர்பாக பீளமேடு போலீசாருக்கு உடனடியாக தகவல் அளிக்கப்பட்டது.
தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார், தோட்டாக்களை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்தனர். விமான நிலைய கழிப்பறையில் தோட்டாக்களை போட்டது யாரென கண்டுபிடிக்க தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மற்ற செய்திகள்
