VIDEO : "உள்ள ரொம்ப 'ஹீட்'டா இருக்கு",,.. 'வெளிய' போய் கொஞ்சம் 'காத்து' வாங்குவோம்,,." - விமானத்தின் 'ரெக்கை'யில் ஜாலியாக நடந்து சென்ற 'பெண்'!!!
முகப்பு > செய்திகள் > உலகம்உக்ரைன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று துருக்கியில் இருந்து உக்ரைனில் உள்ள கியேவில் நகரத்தில் அமைந்துள்ள விமான நிலையத்தில் தரை இறங்கியுள்ளது.

விமானம் தரையிறங்கி, அதிலிருந்த பயணிகள் இறங்கத் தயாரான நிலையில், அதில் இருந்த பெண் ஒருவர், விமானத்தில் சூடாக இருப்பதாக கூறி சிறிது நேரம் காற்று வாங்க வேண்டி விமானத்தின் அவசர வாயிலை திறந்து, விமானத்தின் ரெக்கையில் ஏறி அங்கும் இங்குமாக நடந்துள்ளார். இது தொடர்பான சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக, விமானத்தில் பயணித்த சக பயணி ஒருவர் தெரிவிக்கையில், 'விமானம் தரையிறங்கிய போது, கிட்டத்தட்ட விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளும் இறங்கினர். ஆனால், அந்த பெண் மட்டும் அவசர வாயிலை திறந்து கொண்டு, வெளியே சென்று நடந்துள்ளார். அந்த பெண்ணின் இரண்டு குழந்தைகளும், விமானத்திற்கு வெளியே எனதருகில் நின்று கொண்டிருந்தார்கள். அது எங்களின் தாய் தான் என அவர்கள் ஆச்சர்யத்துடன் தெரிவித்தனர்' என்றார்.
பெண்ணின் இந்த செயலுக்காக, உக்ரைன் இன்டெர்நேஷனல் ஏர்லைன்ஸ், அந்த பெண்ணின் பெயரை பிளாக் லிஸ்டில் (black list) சேர்த்துள்ளது. விமான பாதுகாப்பு விதிகள் மற்றும் விமானத்தில் நடத்தை விதிகளை அவர் மீறியதற்காக இந்த முடிவை எடுத்துள்ளது. மேலும், அந்த பெண் அதிக அபராத தொகையை செலுத்த வேண்டும் என்றும் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

மற்ற செய்திகள்
