'வேலை பறிபோகும் 940 ஊழியர்கள்...' 'இந்த தேதிக்குள்ள வரலன்னா அவங்களுக்கும் கேட் பாஸ் கொடுத்திடுங்க...' - இண்டர்நேஷனல் ஏர்போர்ட் அதிரடி...!
முகப்பு > செய்திகள் > வணிகம்மெக்கரன் சர்வதேச விமான நிலையம் தங்களின் 940 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளனர்.
கொரோனா பரவல் காரணமாக உலக நாடுகள் அனைத்தும் பொருளாதார நிலையில் பல தேக்கங்களை சந்தித்து வருகின்றன. மேலும் பல்வேறு பிரபல நிறுவனங்களும் தங்களின் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றன. இந்த நிலையில் தற்போது மெக்கரன் சர்வதேச விமான நிலையமும் தங்களின் உணவு சேவை மையத்தில் பணிபுரியும் 940 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய போவதாக அறிவித்துள்ளது.
மேலும் இந்த முடிவு குறித்து கடந்த செவ்வாய்கிழமை, நெவாடா வேலைவாய்ப்பு, பயிற்சி மற்றும் மறுவாழ்வுத் துறைக்கு எச்.எம்.எஸ் ஹோஸ்ட் ஒரு கடிதம் அனுப்பியுள்ளது. அதில் தங்கள் நிறுவனம் 940 ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்ய உள்ளதாகவும், மேலும் வரும் அக்டோபர் 15-ஆம் தேதிக்குள் பணிக்குத் திரும்பாத தொழிலாளர்களையும் வேலையில் இருந்து நீக்கப்படுவர் என அந்தக் குழுவில் கூறப்பட்டுள்ளது.
மேலும் அவர்கள் வெளியிட்டுள்ள பட்டியலில் இடம்பெற்றுள்ளோர் பெரும்பாலும் துரித உணவு செய்பவர்கள், உணவகங்களில் பரிமாறுபவர்கள் என கூறப்படுகிறது.
பெரும்பாலும் விமான நிலையத்தில் செயல்படும் உணவு மற்றும் சில்லறை விற்பனை நிலையங்கள் கொரோனா தொற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.