‘அப்பாவை ரொம்ப நம்புனேன்’.. அவரு இப்டி பண்ணுவார்னு நெனக்கவேயில்ல’.. அதிரவைத்த இளம்பெண்ணின் புகார்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇளம்பெண் ஒருவர் லூடோ கேமில் தனது தந்தை ஏமாற்றியதாக கூறி நீதிமன்றத்தில் புகார் அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆன்லைன் கேம் மோகம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அதிகரித்து வருகிறது. இந்த கொரோனா காலகட்டத்தில் அதிக மக்கள் ஆன்லைன் கேமில் மூழ்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக லூடோ கிங் கேம்தான் மக்களால் அதிகம் விளையாடப்படுவதாக கூறப்படுகிறது. உலகம் முழுக்க 300 மில்லியன் மக்கள் இந்த கேமை டவுன்லோடு செய்துள்ளனர்.
இந்தியாவில் இந்த விளையாட்டுக்கு அடிமையாகிய கணவர், மனைவி தன்னை தொடர்ச்சியாக லூடோ கேமில் தோற்கடித்ததால் இரவு முழுக்க மனைவியை சித்தரவதை செய்த சம்பவம் நடந்தது. அதேபோல் லூடோ விளையாடும் போது தொந்தரவு செய்த நண்பனை சுட்டுக்கொன்ற சம்பவமும், லூடோ விளையாட்டில் சேர்த்துக்கொள்ளாத அக்கா மீது சிறுவன் காவல்நிலையத்தில் புகார் அளித்த சம்பவமும் அரங்கேரியது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மத்திய பிரதேசம் போபாலை சேர்ந்த 24 வயதான இளம்பெண் ஒருவர் குடும்ப நீதிமன்றத்தில் தனது தந்தை மீது புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், ‘நான் என் தந்தையை மிகவும் நம்பினேன். ஆனால் அவர் லூடோ கேமில் என்னை ஏமாற்றுவார் என எதிர்பாக்கவில்லை’ என வழக்கு தொடர்ந்துள்ளார். கேமிற்காக பெற்ற தந்தை மீதே வழக்குத் தொடுத்த இளம்பெண்ணுக்கு உளவியல் ரீதியாக நான்கு முறை ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக நீதிமன்ற ஆலோசகர் சரிதா தெரிவித்துள்ளார்.
Madhya Pradesh: A 24-year-old woman approaches Bhopal Family Court, alleging cheating by her father in a ludo game. "She said she trusted her father so much & didn't expect him to cheat. We have conducted 4 counselling sessions with her," says Sarita, a counsellor at the court. pic.twitter.com/WDgukJ53Jn
— ANI (@ANI) September 26, 2020