'சீனாவிலிருந்து தமிழகம் வந்த 'ஸ்பெஷல் டெஸ்டிங்' கருவிகள்'...'மின்னல் வேகத்தில் பரிசோதனை'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Apr 09, 2020 12:30 PM

சீனாவிலிருந்து கொரோனா தொற்று சோதனைக்காக துரித சோதனை கருவிகள் தமிழகம் வந்துள்ளது. இந்த சோதனை நாளை முதல் தொடங்க இருக்கிறது.

Chennai : Corona special testing kits comes from China

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இருப்பினும் கொரோனா வைரஸ் அதிகமாக பரவி வருகிறது. இதுவரை இந்தியாவில் 540 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 17 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே கொரோனா தொற்று சோதனைக்காக சீனாவிலிருந்து ஒரு லட்சம் துரித சோதனை கருவிகளை தமிழக அரசு வாங்கியுள்ளது.

இந்த சோதனையானது மின்னல் வேகத்தில் நடந்து, விரைவாக சோதனை முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். இந்த சோதனை வேகமாக நடைபெறுவதால், ஒரே நேரத்தில் ஒரு லட்சம் பேருக்கு பரிசோதனை செய்ய முடியும். கொரோனா பாதித்த இடங்களுக்கு இந்த கருவிகள் உடனடியாக அனுப்பி வைக்கப்பட இருக்கிறது.

இந்த கருவிகளின் சிறப்பு என்னவென்றால், இதன் மூலம்  சமூகப் பரவல் இருக்கிறதா என்பதை உடனடியாக அறிய முடியும். மேலும் அண்ணா பல்கலைகழக ஜி.ஐ.எஸ் மேப்பிங் மூலமாக எந்தெந்த பகுதி மக்களுக்கு துரித பரிசோதனைகள் தேவைப்படும் என்பதும் கண்டறியப்பட இருக்கிறது.