'50 வருஷமா கடல்லயே இருந்த லெட்டர்'.. 'கண்டுபிடித்த பிறகு' மீண்டும் நடந்த சுவாரஸ்யம்!
முகப்பு > செய்திகள் > உலகம்By Siva Sankar | Jul 22, 2019 05:42 PM
50 வருடத்துக்கு முன்பாக பாட்டிலில் அடைத்துவைக்கப்பட்டு வீசப்பட்ட கடிதம் ஒன்று அண்மையில் கிடைத்துள்ள சுவாரஸ்யம் தெற்கு ஆஸ்திரேலியாவில் நிகழ்ந்துள்ளது.

தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள தலியா பகுதியில் 9 வயது சிறுவனான ஜியா எலியட் கடற்கரை மணலில் விளையாண்டுக் கொண்டிருந்தபோது அங்கு புதைந்து கிடந்த பாட்டில் ஒன்று அவனது கைகளில் கிடைத்துள்ளது. ஆனால் அந்த பாட்டிலில் இருந்த ஆச்சரியம் என்னவென்றால் அதனுள் ஒரு கடிதம் இருந்துள்ளதுதான்.
சிறுவன் அந்த பாட்டிலை தன் தந்தையின் கைகளில் கொடுத்தபோது, அதில் 1969-ஆம் ஆண்டு ஒரு 13 வயது சிறுவனால் எழுதப்பட்ட கடிதம் அந்த பாட்டிலினுள் இருப்பதை, சிறுவனின் தந்தை கண்டுபிடிக்கிறார். அந்த கடிதத்தில், பால் கில்மோர் என்கிற 13 வயது சிறுவன் இங்கிலாந்தின் பேர்ஸ்டார் கப்பல் மூலம் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகருக்கு சென்றுகொண்டிருந்தபோது எழுதப்பட்ட அந்த கடிதத்தில், தன் கடிதத்தை கண்டுபிடிப்பவர்கள் பதில் எழுதவும், என்றும் குறிப்பிட்டு எழுதியிருக்கிறான்.
உடனே அந்த சிறுவனைக் காண வேண்டும் என்று தனது தந்தையிடம் ஜியா எலியட் கோரிக்கை வைக்க, தந்தையும் சமூக வலைதளங்கள் மூலம் கில் மோருக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். ஆனால் ஒரு வழியாக அந்த கடிதம் கில்மோருக்கு கிடைத்துவிடுகிறது.
இதற்கு பதில் அளிக்கும் விதமாக, கில்மோர், ஆஸ்திரேலியாவில் 4 வருடங்கள் இருந்ததாகவும், அதன் பின்னர் இங்கிலாந்துக்கு சென்றுவிட்டதாகவும், 50 வருடங்களுக்குப் பிறகு அதைப் பார்த்துவிட்டு வந்த மறுகடிதம் மகிழ்ச்சி அளிப்பதாகவும் கூறியுள்ளார். கில்மோர் ஆங்கில ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
