டிராலியில் கேட்பாரற்று கிடந்த ‘மர்மப்பை’.. மோப்ப நாயுடன் வந்த போலீசார்.. சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை விமான நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த மர்ம பையால் பயணிகள் பீதி அடைந்தனர்.

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தின் வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் டிராலியில் பை ஒன்று இருந்துள்ளது. நீண்ட நேரமாக அந்த பையை யாரும் எடுக்காததால் பயணிகள் சந்தேகமடைந்தனர். இதுகுறித்து உடனே விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனை அடுத்து மத்திய தொழிற்படை போலீசார் மோப்ப நாயுடன் சம்பவ இடத்துக்கு வந்தனர்.
அவர்கள் வந்து பையை சோதனை செய்ததில் வெடிகுண்டு ஏதும் இல்லை என்பது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து அந்த பையை பிரித்து பார்த்ததில் துணிகள் மற்றும் பிஸ்கட்டுகள் இருந்துள்ளன. விமானத்தில் வந்த பயணிகள் யாராவது செல்லும் அவசரத்தில் பையை மறந்து விட்டுச் சென்றிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதனை அடுத்து அந்த பை விமான நிலைய மேலாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த மாதம் மங்களூரு விமான நிலையத்தில் கிடந்த மர்ம பையில் வெடிகுண்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
