சென்னை விமான நிலையத்தில் கிடந்த ‘மர்மப்பை’.. பீதியடைந்த பயணிகள்..! பைக்குள் என்ன இருந்தது?

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Jan 28, 2020 11:02 AM

சென்னை விமான நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த மர்மப்பையால் பரபரப்பு ஏற்பட்டது.

Mysterious bag found in Chennai International Airport

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பயணிகள் வருகை பகுதியில் நீண்ட நேரமாக கேட்பாரற்று மர்மப்பை ஒன்று கிடந்துள்ளது. இதனைப் பார்த்த துப்புரவு பெண், விமான நிலைய அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் உடனடியாக வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாயை வரழைத்து சோதனை மேற்கொண்டனர்.

சோதனையில் பைக்குள் ஆடைகள், உணவு பொருட்கள் மற்றும் தண்ணீர் பாட்டில் மட்டுமே இருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து அந்த பை விமான நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. சில தினங்களுக்கு முன்பு மங்களூரு விமான நிலையத்தில் கிடந்த மர்மப்பையில் வெடிகுண்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.