"நீங்க அதுகிட்ட கோபப்பட்டா இதான் நடக்கும்".. 13 வயசு சென்னை சிறுவன் உருவாக்கிய ரோபோ.. மிரண்டு போன நெட்டிசன்கள்
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்இன்றைய தொழில்நுட்ப காலகட்டத்தில், ஏராளமான அறிவியல் கண்டுபிடிப்புகள் தொடர்ந்து உருவாக்கப்பட்டு வருகிறது.
அதே போல, மனித கண்டுபிடிப்புகளில் பலரையும் வியக்க வைக்கக் கூடிய விஷயம் என்னவென்றால் ரோபோக்கள் தான்.
பல இடங்களில் உருவாக்கப்பட்டு வரும் ரோபோக்கள், மனிதர்கள் செய்யும் வேலைகளை செய்யும் வகையிலும் வடிவமைக்கப்பட்டு வருகிறது.
ஒரு கருவி போலவே இந்த ரோபோக்கள் பார்க்கப்பட்டாலும், சமீபத்தில் இதற்கு உணர்ச்சி இருக்கும் வகையில் உருவாவதையும் நாம் கேள்விப்பட்டிருப்போம். அந்த வகையில், சென்னையை சேர்ந்த 13 வயதே ஆகும் மாணவர் ஒருவர், ரோபோக்களை வைத்து உருவாகியுள்ள கண்டுபிடிப்பு, பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
சென்னையை சேர்ந்த 13 வயது சிறுவனான பிரதீக் என்பவர், ரோபோ ஒன்றை உருவாக்கி உள்ளார். அவர் உருவாக்கிய ரோபோவில் உள்ள சிறப்பம்சம் என்னவென்றால், அது உணர்ச்சிகளை கூட வெளிப்படுத்தும் என்பது தான். மனிதர்கள் செய்வதை அப்படியே ரோபோக்கள் செய்தாலும், நம்மை போல அவற்றின் மூலம் உணர்ச்சிகளை வெளிப்படுத்த முடியாது.
சிரிப்பு, கோபம் என எந்த உணர்ச்சிகளையும் காட்டாத ரோபோக்கள் அதிகம் வடிவமைக்கப்பட்டு வரும் நிலையில், பிரதீக் என்ற சிறுவன், அந்த உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் விதத்தில் தான் இந்த ரோபோவை உருவாக்கி உள்ளார்.
அந்த ரோபோவிற்கு ரஃபி என பெயர் வைத்துள்ள சிறுவன் பிரதீக் இது பற்றி பேசுகையில், "என்னுடைய கேள்விகளுக்கு எல்லாம் ரஃபி பதில் சொல்லும். நீங்கள் ஒரு வேளை கோபமடைந்து ரஃபியை திட்டி விட்டால், நீங்கள் மன்னிப்பு கேட்கும் வரை அது எந்த பதிலையும் கொடுக்காது. அதே போல, நீங்கள் சோகமாக இருந்தால் கூட ரஃபி கண்டுபிடித்து விடும். உங்கள் முக பாவனைகளை ஆராய்ந்தே நீங்கள் சோகமாக இருக்கிறீர்களா என்பதை அறிந்து கொள்ளும்" என்றும் பிரதீக் கூறி உள்ளார்.
13 வயது தமிழக சிறுவனனின் இந்த கண்டுபிடிப்பபை அறிந்து பலரும் மிரண்டு போயுள்ளனர். பலரும் சிறுவனை பாராட்டி வரும் நிலையில், இந்த ரஃபியை அடுத்தடுத்த கட்டங்களில் அப்டேட் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தி வருகின்றனர். மேலும் முக பாவனைகள் காட்டவும் அதனை தயார் செய்ய வேண்டும் என்றும், இருந்தாலும் 13 வயது சிறுவனின் கண்டுபிடிப்பு என்பது அசாத்தியமானது என்றும் சிலர் குறிப்பிட்டு வருகின்றனர்.