இரவு 12 மணி.. வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பிய தோழிகள்.. படுவேகத்தில் வந்த கார்.. அடுத்தடுத்து நடந்த துயர சம்பவம்!!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇரவு பணி முடித்து விட்டு திரும்பிய தோழிகள் இருவருக்கு நேர்ந்த துயரம், கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

கேரள மாநிலம், பாலக்காடு பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீலட்சுமி. ஆந்திராவின் ரெட்டிகாரப்பள்ளி என்னும் பகுதியை சேர்ந்தவர் லாவண்யா.
இவர்கள் இருவரும் சென்னையில் அமைந்துள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
ஸ்ரீலட்சுமி மற்றும் லாவண்யா ஆகிய இருவரும் நெருங்கிய தோழிகள் என தகவல் தெரிவிக்கும் நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பாக இரவு நேரம் பணியை முடித்து விட்டு அவர்கள் தங்கி இருந்த வீட்டிற்கு ஒன்றாக கிளம்பி உள்ளனர். அந்த சமயத்தில், எதிர்பாராத சம்பவம் ஒன்று நள்ளிரவு வேளையில் அரங்கேறி உள்ளது.
வீட்டிற்கு சென்று கொண்டிருந்த ஸ்ரீலட்சுமி மற்றும் லாவண்யா ஆகியோர் மீது படு வேகத்தில் வந்த கார் ஒன்று மோதி உள்ளதாக தகவல்கள் கூறுகின்றது. இதில் இளம் பெண்கள் இருவரும் தூக்கி வீசப்பட்ட நிலையில், சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், உயிருக்கு போராடிக் கொண்டிருந்த இருவரையும் உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர்.
அங்கே ஸ்ரீலட்சுமியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதன் பின்னர், லாவண்யாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவரும் அடுத்த ஒரு சில தினங்களில் உயிரிழந்து விட்டார்.
இதனிடையே, இரண்டு இளம் பெண்கள் உயிரிழப்புக்கு காரணமாக இருந்த காரை ஓட்டி வந்த இளைஞரையும் அப்பகுதியில் இருந்தவர்கள் போலீசாரிடம் பிடித்து கொடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. மது போதையில் இருந்த இளைஞர், வேகமாக காரை ஓட்டிய போது, அதன் கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த விபத்து நிகழ்ந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
நள்ளிரவு சுமார் 12 மணியளவில் இரண்டு பெண் ஐடி ஊழியர்கள் கார் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம், கடும் சோகத்தை உண்டு பண்ணி உள்ளது.

மற்ற செய்திகள்
