மாத்திரை டப்பா வடிவில் 'திருமண' அழைப்பிதழ்.. "EXPIRY DATE'ல இருந்த விஷயம் தான் அல்டிமேட்"!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்இன்றைய காலகட்டத்தில், திருமண நிகழ்வு என்பது மிகப் பெரிய ஒரு கொண்டாட்டமாக தான் பார்க்கப்படுகிறது.

Also Read | 431 ஊழியர்களுக்கும் போனஸ்.. 'Boss' சொன்ன அதிரடி அறிவிப்பு.. "எல்லாத்துக்கும் அந்த ஒரு விஷயம் தான் காரணமாம்"
மணமக்கள் இருவரும், தங்கள் வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை தொடங்கும் நாளாக திருமணம் இருந்து வருகிறது.
அப்படி ஒரு நாளை, வாழ்நாள் முழுவதும் ஒரு உணர்வுள்ள தருணமாக நினைவு கூரும் வகையில் மாற்ற தான் அனைவரும் நினைப்பார்கள்.
இதற்காக, இன்றைய காலத்தில், திருமணத்திற்கு முன்பே எடுக்கப்படும் போட்டோஷூட் தொடங்கி, திருமண பத்திரிக்கை என அனைத்திலுமே ஏதாவது ஒரு புதுமையை அவர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள். அடிக்கடி நடைபெறும் வித்தியாசமான திருமண போட்டோசூட் தொடர்பான புகைப்படங்கள் ஏராளம் வைரல் ஆவதை நாம் பார்த்திருப்போம்.
அதே போல தான், திருமண அழைப்பிதழில் கூட சாதாரணமான கார்டாக இல்லாமல், விமான டிக்கெட் வடிவில், ரேஷன் கார்டு வடிவில் என வித விதமாக டிசைன் செய்து, அச்சிட்டு வருகிறார்கள். அந்த வகையில், தற்போது வெளியாகி உள்ள திருமண அழைப்பிதழ் தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள், இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.
சென்னையை சேர்ந்த காயத்ரி இளங்கோவன் மற்றும் விஸ்வநாத் ராமலிங்கம் ஆகியோருக்கு செப்டம்பர் 02 ஆம் தேதியன்று திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அப்படி இருக்கும் நிலையில், தங்களின் திருமண அழைப்பிதழை மிகவும் வித்தியாசமான முறையில், காயத்ரி டிசைன் செய்ய முடிவு செய்துள்ளார்.
அவர் பார்மசிஸ்ட் என கூறப்படும் நிலையில், தனது திருமண அழைப்பிதழை மருந்து டப்பா வடிவில் தயார் செய்துள்ளார். மருந்து டப்பா வெளியே, இருவரின் பெயர் இருக்கும் நிலையில், அதன் உள்ளே இருக்கும் அழைப்பிதழில், மணமக்களின் பெயர்கள், திருமணம் நடைபெறும் தேதி மற்றும் இடம் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் உள்ளது. அது மட்டுமில்லாமல், அத்துடன் ஸ்டார் வடிவிலான மிட்டாயும் உள்ளது.
மேலும், 'Manufactured by' என்னும் இடத்தில், இருவரது பெற்றோர்களின் பெயர்களும், இது போல Dosage, Storage உள்ளிட்ட இடங்களில் வித்தியாசமான பதில்களும் இடம்பெற்றுள்ளது. அதே போல, Expiry Date இடத்திலும் "வாழ்நாள் முழுவதும்" என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படி முழுக்க முழுக்க காயத்ரி மற்றும் விஸ்வநாத் தொடர்பான தகவல்கள், டப்பாவை சுற்றி இடம்பெற்றுள்ளது.
மருந்து டப்பா வடிவிலான திருமண அழைப்பிதழை காணும் பலரும் வேற லெவலில் இந்த புதுமையை பாராட்டி வருகின்றனர். சமீபத்தில், தமிழ்நாட்டை சேர்ந்த எழிலரசன் மற்றும் வசந்தகுமாரி ஆகியோரின் திருமண அழைப்பிதழும் மாத்திரை அட்டை வடிவில் தயாரித்திருந்ததும் அதிகம் வைரலாகி இருந்தது குறிப்பிடத்தக்கது .

மற்ற செய்திகள்
