முப்பெரும் விழாவாக சென்னையில் நடக்கும் திருநங்கைகளுக்கான ‘மிஸ் சென்னை 2022’ போட்டி.!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் மிஸ் சென்னை திருநங்கைக்கான தேர்வு, திருநங்கைகளின் முப்பெரும் விழா 2022 என்கிற பெயரில் நடக்கவிருக்கிறது.

இந்த திருநங்கைகளின் முப்பெரும் விழா 2022 நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கான தேர்வு சென்னையில் தற்போது நடத்தப்பட்டு இருக்கிறது. வரும் அக்டோபர் 15-ஆம் தேதி திருநங்கைகளின் முப்பெரும் விழா 2022 என்கிற இந்த நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறுகிறது.
இது தொடர்பான அறிவிப்புகள் ஏற்கனவே வெளியாகியிருந்த நிலையில் அந்த நிகழ்ச்சிக்கான ஒரு பகுதியாக அழகு போட்டிக்கான தேர்வு தற்போது நடைபெற்றிருக்கிறது. அதன்படி மிஸ் சென்னை திருநங்கை அழகி போட்டி நிகழ்ச்சிக்கான தேர்வு சென்னை கீழ்ப்பாக்கம் டான் பாஸ்கோ கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.
தொடர்ந்து மூன்று நாட்கள் திருநங்கைகளின் முப்பெரும் விழா நடைபெறவிருப்பதால், அக்டோபர் 13-ஆம் தேதி தொடங்கும் இந்த நிகழ்ச்சியில் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் திருநங்கைகளுக்கான முக்கியத்துவம் குறித்த கருத்தரங்கம் நடக்கிறது. இதேபோல் அக்டோபர் 15-ஆம் தேதி திருநங்கைகளுக்கான உடல் இன மாற்றத்திற்கான மருத்துவ சிகிச்சைகள் மற்றும் அதற்கான உதவிகள் குறித்த கருத்தரங்கங்களும் நடக்கின்றன. அக்டோபர் 15-ஆம் தேதி திருநங்கைகளின் முப்பெரும் விழா 2022 - சென்னை கலைவாணர் அரங்கத்தில் வெகு விமர்சையாக நடக்க இருக்கிறது. அதன்படி மிஸ் சென்னை திருநங்கை நிகழ்ச்சிக்கான இந்த தேர்வில் 22 திருநங்கைகள் கலந்து கொண்டு இருக்கின்றனர்.
இவர்களில் 12 பேர் வரும் 15-ஆம் தேதி நடக்கக்கூடிய மிஸ் சென்னை திருநங்கை நிகழ்ச்சியின் இறுதிப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டு இருக்கின்றனர். புகழ் பெற்ற பேஷன் கலைஞர்களின் முன்பாக இவர்கள் அணிவகுத்து வந்தனர். இந்த மிஸ் சென்னை திருநங்கை இறுதிப்போட்டியில் வெற்றி பெறக்கூடிய மூன்று திருநங்கைகளுக்கு வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் மற்றும் மிஸ் சென்னை திருநங்கை பட்டம் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read | சோர்வாக அமர்ந்தபடி.. வயசான மனுஷன் செஞ்ச விஷயம்.. "நெட்டிசன்கள் மனதை உடைத்த வீடியோ!!

மற்ற செய்திகள்
