வொர்க் ஃப்ரம் ஹோம் பாக்குறவங்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த PUB-கள்.! இதுவல்லவோ ஆஃபர் .. திக்குமுக்காடிய ஊழியர்கள்..!
முகப்பு > செய்திகள் > உலகம்இங்கிலாந்தில் வீட்டில் இருந்தே பணிபுரியும் ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கும் வகையில் இங்கிலாந்தில் உள்ள Pub-கள் புதிய திட்டத்தை கையில் எடுத்திருக்கின்றன. இதனால் ஊழியர்கள் குஷியில் உள்ளனர்.
Also Read | பேட்டிங் பண்ண சொன்னா என்ன பண்ணிட்டு இருக்க.. கொந்தளித்த CSK வீரர்.. கிரவுண்ட்ல நடந்த களேபரம்.. வீடியோ..!
கொரோனா 2020 ஆம் ஆண்டு உலகையே ஸ்தம்பிக்க செய்தது. சீனாவின் வூஹான் மாகாணத்தில் இருந்து பரவியதாக சொல்லப்படும் இந்த வைரஸ் தொற்றுக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பலியாகினர். இருப்பினும், கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகள் புழக்கத்திற்கு வந்த பின்னர், உயிரிழப்புகள் கணிசமான அளவில் குறைந்திருக்கின்றன. அதேநேரத்தில் கொரோனா சமயத்தில் உலக அளவில் பல நிறுவனங்கள் வீட்டில் இருந்தே தங்களது ஊழியர்களை பணிபுரியும்படி அறிவித்தன.
அப்போது துவங்கி முன்னணி நிறுவனங்களின் ஊழியர்கள் Work From Home எனப்படும் வீட்டில் இருந்தே பணிபுரியும் வசதியையே பயன்படுத்திவருகின்றனர். ஒருபக்கம் தொடர்ந்து வீட்டிற்குள்ளேயே அடைபட்டு கிடப்பதால் மன அழுத்தம் அதிகரிப்பதாக ஊழியர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இங்கிலாந்தை சேர்ந்த Pub-கள் Working From Pub எனும் ஆஃபரை ஊழியர்களுக்கு வழங்கி வருகின்றன. இந்த திட்டத்தின்படி, ஊழியர்கள் இந்த Pub ல் இருந்தபடி வேலைகளை செய்யலாம். அவர்களுக்கு தேநீர், காபி, மத்திய உணவு, பானங்கள் ஆகியவை வழங்கப்படும் எனத தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதில் ஒவ்வொரு Pub-ஐ பொறுத்து கட்டணங்களும் வசூலிக்கப்படுகின்றன. வீட்டில் இருந்தே வேலை செய்து வருவதால் தங்களுக்கு மன உளைச்சலுக்கு ஆளாவதாகவும், அதனாலேயே இந்த இடங்களுக்கு வருவதாகவும் கூறுகின்றனர் வாடிக்கையாளர்கள். இதுபற்றி பேசிய வாடிக்கையாளர் ஒருவர்,"இங்கே 10 டாலர்களுக்கு சான்டவிச், மின் இணைப்பு, அளவில்லா காபி மற்றும் தேநீர் ஆகியவற்றை தருகின்றனர். வீட்டில் இருந்தால் தேவையற்ற சத்தங்களை கேட்டுக்கொண்டும், வேறு விஷயங்களில் கவனத்தை செலுத்தவும் வேண்டும். இங்கே அப்படியில்லை. அந்த அனுபவம் வித்தியாசமானதாக இருக்கிறது" என்றார். இந்நிலையில், இந்த திட்டத்திற்கு மக்களிடையே வரவேற்பும் கிடைத்து வருகிறது.