தமிழகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்!.. முக்கிய தரவுகள்!.. ஓரிரு வரிகளில்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1596 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று மேலும் 76 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், சென்னையில் மட்டும் புதிதாக 55 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 358 ஆக உயர்ந்துள்ளது.
இன்றைய நிலவரப்படி, கொரோனா தொற்றால் தமிழகத்தில் மொத்தம் 18 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், குணமடைந்தோரின் எண்ணிக்கை 635 ஆக உள்ளது. 940 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
