'காத்தோட்டமா இருக்குமேன்னு வெளியே இருந்த அப்பா, பொண்ணு'... 'கொஞ்ச நேரத்துல கேட்ட அலறல்' ... சென்னையை உலுக்கிய கோரம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Apr 20, 2020 04:12 PM

தாம்பரம் அடுத்த பீர்க்கன்கரணை பகுதியில் வசிப்பவா் ராஜாங்கம். பெயிண்டராக வேலை செய்து வந்த இவர், தற்போது ஊரடங்கு அமலில் இருப்பதால் வீட்டில் இருந்துள்ளார். தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், வீட்டிற்குள் புழுக்கம் அதிகமாக இருக்கிறது என, நேற்று இரவு வீட்டின் முன்பு உள்ள காலி இடத்தில் கட்டிலைப் போட்டு அமர்ந்துள்ளார். அப்போது ராஜாங்கத்தின் மகள்களான, கலா மற்றும் சுமித்திரா ஆகிய இருவரும் அப்பாவுடன் அமர்ந்து பேசி கொண்டு இருந்துள்ளார்கள்.

Chennai : 3 Killed after wall collapse in Tambaram

இந்நிலையில் அவர்கள் கட்டிலை போட்டு அமர்ந்திருந்த இடத்தை சுற்றி காலி சுவர் ஒன்று இருந்துள்ளது. மிகவும் பழமையான, சேதமடைந்த அந்த சுவர், மூவரும் அமர்ந்து இருந்த கட்டிலின் மீது பலத்த சத்தத்துடன் இடிந்து விழுந்தது. இதனை சற்றும் எதிர்பாராத மூவரும், இடிபாடுகளுக்குள் சிக்கி அலறி துடித்துள்ளார்கள். இதனிடையே மூவரின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள், அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இதில் மருத்துவமனை செல்லும் வழியிலேயே ராஜாங்கம் உயிரிழந்தார். மகள்கள் இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவர்கள் இருவரும் இன்று காலை உயிரிழந்தனர். ஒரே நேரத்தில் தந்தை, மகள்கள் உட்பட 3 போ உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.