"அவங்க யாரும் இங்க வேல பாக்கறதில்ல"... 'சர்ச்சை' விளம்பரத்தால் சிக்கிய... 'பேக்கரி' உரிமையாளர்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை தி.நகர் பகுதியிலுள்ள பேக்கரி உரிமையாளர் ஒருவர் வெளியிட்ட விளம்பரம் பெரும் சர்ச்சையானதை தொடர்ந்து அந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை தி.நகர் பகுதியிலுள்ள ஜெயின் சமுதாய பேக்கரி ஒன்றின் உரிமையாளர் ஆன்லைன் வழியாக வியாபாரம் செய்து வரும் நிலையில் தனது பேக்கரி தொடர்பான விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த விளம்பரத்தில், 'ஆர்டர்கள் அனைத்தும் ஜெயின் சமுதாயத்தினரால் மட்டுமே உருவாக்கப்படுகிறது. முஸ்லீம் ஊழியர்கள் இங்கு இல்லை' என இடம் பெற்றிருந்தது.
குறிப்பிட்ட மதத்தை இழிவாக பேசி பகிரப்பட்ட இந்த விளம்பரம் இணையத்தில் அதிகம் பரவலானதை தொடர்ந்து சர்ச்சையை கிளப்பியது. இதுகுறித்து விவரமறிந்த போலீசார் சம்மந்தப்பட்ட பேக்கரி உரிமையாளரை கைது செய்தனர். இதுகுறித்து அந்த பேக்கரியின் ஊழியர்கள் சிலர் கூறுகையில், 'இது முஸ்லீம் மக்களை தவறாக சித்தரிக்க பதிவு செய்ய வேண்டி பகிர்ந்த விளம்பரமல்ல. முஸ்லீம் மதத்தை சேர்ந்தவர்கள் செய்யும் பொருட்களை வாங்க மறுப்பதாக ஒரு வதந்தி பரவியிருந்தது. அதனை கருத்தில் கொண்டு அப்படி ஒரு கருத்தை இணைத்தோம்' என தெரிவித்துள்ளனர்.