'கொரோனா வைரஸ் இயற்கையானது அல்ல’... ‘அதோடு நாம் வாழ பழகிக் கொள்ள வேண்டும்’... 'மத்திய அமைச்சர் பரபரப்பான பேட்டி'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனா வைரஸ் இயற்கையானது அல்ல, அது செயற்கையாக உருவாக்கபட்டது என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, ஆங்கில ஊடகம் என்டிடிவிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிவேகத்தில் பரவி வரும் நிலையில், இதுகுறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்காரி அந்தப் பேட்டியில் தெரிவித்தாவது, ‘நாம் கொரோனா வைரசுடன் வாழும் கலையை பழகிக்கொள்ள வேண்டும். இயற்கையான வைரஸ் அல்ல. செயற்கையான முறையில் உருவாக்கப்பட்ட இந்த வைரஸ் இன்று பல நாடுகளை பாதித்துள்ளது.
கொரோனா வைரசுக்காக தடுப்பு மருந்துகளை அறிவியலாளர்கள் கண்டுபிடித்து வருகின்றனர். தற்போது அதைத் தடுக்கும் மருந்து ஏதும் இல்லை. அது கிடைத்தால் மட்டுமே பிரச்சனையில் இருந்து நாம் முழுமையாக வெளியே வர முடியும். விரைவில் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படும் என எதிர்பார்க்கிறேன். ஆனால், இது எப்போது நடக்கும் என்பது தெரியவில்லை.
அதனால், உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். ஒரு மீட்டர் இடைவெளி விட்டு நிற்க வேண்டும். முகக்கவசங்களை அணிய வேண்டும். இதைத்தவிர வேறு எந்த வாய்ப்பும் இல்லை. கொரோனாவை எதிர்த்து போர் செய்யும் அதே நேரத்தில் நாம், பொருளாதார பிரச்னைகளையும் கவனிக்க வேண்டியுள்ளது. இந்திய ஏழ்மை நாடு. நம்மால் மாதக்கணக்கில் பொது முடக்கத்தை நீட்டிக்க முடியாது” என்றார்.
