தோனி, கோலி, ரோஹித்தை 'ஓரங்கட்டிய' வீரர்.. 2019 முழுக்க இவரைத்தான்.. இந்தியர்கள் 'அதிகமா' தேடி இருக்காங்க!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Manjula | Dec 11, 2019 06:38 PM
2019-ம் ஆண்டு இன்னும் 20 நாட்களில் முடிவுக்கு வரப்போகிறது. இதனையொட்டி இந்தியர்கள் கூகுளில் அதிகம் தேடிய தகவல்களை அந்நிறுவனம் வெளியிட்டு உள்ளது. அதில் உலகக்கோப்பை கிரிக்கெட், லோக்சபா தேர்தல், சந்திராயன் 2 குறித்த தகவல்களை அதிகம் தேடியுள்ளனர்.
குறிப்பாக அதிகம் தேடப்பட்ட டாப் 5 இந்திய பிரபலங்கள் பட்டியலை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் 3-வது இடம் பெற்றுள்ளார். (1. அபிநந்தன் வர்த்தமான் 2. லதா மங்கேஷ்கர் 3. யுவராஜ் சிங் 4. ஆனந்த் குமார் 5. விக்கி கவுஷல்)
கிரிக்கெட் உலகின் அதிக புகழ்வாய்ந்த தோனி, கோலி, ரோஹித் போன்றோரை ஓரங்கட்டி யுவராஜ் சிங் இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags : #CRICKET #VIRATKOHLI #MSDHONI #YUVRAJSINGH