வெளிநாட்டில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு வந்த ‘பிறந்தநாள் பரிசு’.. ஒரே சந்தேகமா இருக்கே.. பிரித்துப் பார்த்த அதிகாரிகளுக்கு காத்திருந்த ஷாக்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நெதர்லாந்தில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு வந்த பிறந்த நாள் பரிசை பிரித்துப் பார்த்த அதிகாரிகளுக்கு அதிர்ச்சி காத்திருந்துள்ளது.

சென்னை
நெதா்லாந்து நாட்டிலிருந்து சென்னை விமான நிலையத்துக்கு வெளிநாட்டு தபால் மற்றும் பாா்சல்கள் சரக்கு விமானத்தில் வந்திருந்தன. ஒரு பாா்சல் ஆந்திரா மாநிலம் விஜயவாடா முகவரிக்கும், மற்றொரு பாா்சல் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் முகவரிக்கும் வந்துள்ளது.
பிறந்த நாள் பரிசு
இதனை அடுத்து வெளிநாடுகளிலிருந்து வந்திருந்த பாா்சல்களை சுங்க அதிகாரிகள் வழக்கமாக பரிசோதித்துள்ளனர். அப்போது நெதர்லாந்தில் வந்த 2 பார்சல்கள் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அந்த பாா்சல்களில் பிறந்த நாள் பரிசுகள் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை அடுத்து இரு பாா்சல்களையும் பிரித்துப் பாா்த்துள்ளனர்.
போதைப்பொருள்
ஒரு பாா்சலில் விலை உயா்ந்த 32 போதை மாத்திரைகள் இருந்துள்ளன. மற்றொரு பாா்சலில் பதப்படுத்தப்பட்ட உயா்ரக கஞ்சா போதைப்பொருள் 419 கிராம் இருந்துள்ளது. இரு பாா்சல்களில் இருந்த போதைப்பொருட்களின் மதிப்பு சுமாா் ரூ.2 லட்சம் என இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
போலியான முகவரி
இதனை அடுத்து போதைப்பொருட்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். இதனைத் தொடர்ந்து பார்சலில் குறிப்பிட்ட ஹைதராபாத், விஜயவாடா முகவரிக்கு விசாரணைக்காக அதிகாரிகள் சென்றுள்ளனர். அங்குபோன பின் தான் பாா்சல்களில் இருந்த முகவரிகள் போலியானவை என்று தெரியவந்துள்ளது. இதனால் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து அதிகாரிகள் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றன்ர். வெளி நாட்டில் இருந்து சென்னைக்கு வந்த பிறந்த நாள் பரிசு பார்சலில் போதைப்பொருள் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
