சென்னை விமான நிலையத்தில் கேட்ட 'துப்பாக்கி' சத்தம்.. கழிவறையில் சென்று பார்த்த ஊழியருக்கு காத்திருந்த 'அதிர்ச்சி'
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை : விமான நிலையத்தின் கழிப்பறையில் துப்பாக்கி சத்தம் கேட்ட நிலையில், அங்கு சென்று பார்த்த ஊழியருக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.
சென்னை விமான நிலையத்தில், பாதுகாப்பு பணியில் இருப்பவர் யஸ்பால் (வயது 26). ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த இவர், கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் பணிபுரிந்து வருகிறார்.
இதனையடுத்து, கடந்த சில காலமாக, சென்னை விமான நிலைய பாதுகாப்பு பணியில் யஸ்பால் ஈடுபட்டு வந்துள்ளார்.
சுருண்டு விழுந்த வீரர்
இந்நிலையில், இன்று காலை சுமார் 6 மணியளவில் பணிக்கு வந்த யஸ்பால், சென்னை சர்வதேச விமான நிலையத்தின் புறப்பாடு பகுதியில் பணி மேற்கொண்டு வந்துள்ளார். அப்போது விமான நிலைய கழிப்பறைக்கு சென்ற அவர், திடீரென தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து, தன்னை தானே தலையில் சுட்டுக் கொண்டு, அங்கேயே சுருண்டு விழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
தூய்மை பணியாளர்
இதனிடையே, துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டதால், அங்கிருந்த தூய்மை பணியாளர் ஒருவர், வேகமாக ஓடிச் சென்று, கழிப்பறைக்குள் சென்று பார்த்த போது, பாதுகாப்பு படை வீரர் உயிரிழந்து கிடந்துள்ளதாக கூறப்படுகிறது. உடனடியாக இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த விமான நிலையை அதிகாரிகள், தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள் மற்றும் போலீசார் ஆகியோர், விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
காலையில் பணிக்கு வந்த விமான நிலைய பாதுகாப்பு படை வீரர், திடீரென தனது உயிரை மாய்த்துக் கொள்ள முடிவு செய்துள்ள சம்பவம், அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முடிவுக்கான காரணம் என்ன?
மேலும், அவர் ஏன் அப்படி ஒரு முடிவை எடுத்துக் கொண்டார் என்பதற்கான காரணம் குறித்தும், விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. குடும்ப பிரச்சனை ஏதாவது இருக்குமா அல்லது வேறு ஏதேனும் தனிப்பட்ட காரணங்கள் இருக்குமா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.