"அவரு BAG'ல ஏதும் இல்ல, ஆனா, வயித்துக்குள்ள தான்.." சென்னை AIRPORT வந்த பயணி.. சோதனையில் மிரண்டு போன அதிகாரிகள்
முகப்பு > செய்திகள் > தமிழகம்எத்தியோப்பியாவில் இருந்து சென்னை வந்தடைந்த விமானம் ஒன்றில் வந்த பயணிகளை பரிசோதித்த போது, அங்கிருந்து அதிகாரிகளுக்கு கடும் அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது.

சமீப காலமாகவே, சென்னை, டெல்லி உள்ளிட்ட பல விமான நிலையங்களில் வரும் பயணிகளை சோதனை செய்யும் போது ஏராளமான அதிர்ச்சி தகவல்கள் வெளிவரும்.
அந்த வகையில் தான், தற்போது ஒரு சம்பவமும் சென்னை விமான நிலையத்தில் நடைபெற்றுள்ளது.
உகாண்டாவிலிருந்து எத்தியோப்பிய நாடு வழியாக, சென்னை விமான நிலையத்திற்கு தான்சானியா நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவர் வந்துள்ளார். வழக்கம் போல மற்ற பயணிகளையும் சோதனை செய்வது போல அங்கிருந்த சுங்க அதிகாரிகள், எத்தியோப்பியா ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்த பயணிகளையும் சோதனை செய்துள்ளனர்.
அந்த சமயத்தில், தான்சானியா நாட்டைச் சேர்ந்த பயணி, சுற்றுலா பயணிகள் விசா மூலம் உகாண்டாவிலிருந்து, சென்னை வந்ததாக கூறப்படுகிறது. அப்போது, அவர் மீது அங்கு இருந்த சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டதாக தகவல் தெரிவிக்கின்றது. அப்போது, அவரை நிறுத்தி விசாரணை செய்த போது, முன்னுக்கு பின் முரணாக அந்த நபர் பதில்களை தெரிவித்ததாக கூறப்படுகின்றது. இதனைத் தொடர்ந்து, அவர் கொண்டு வந்த உடைமைகளையும் அதிகாரிகள் சோதனை செய்து பார்த்துள்ளனர். ஆனால், அவற்றுள் சந்தேகமான பொருட்கள் எதுவும் சிக்கவில்லை.
இருந்த போதும் அதிகாரிக்கு அந்த நபரும் இது சந்தேகம் தீராமல் இருந்ததாக கூறப்படும் நிலையில், விமான நிலைய மருத்துவனைக்கு எக்ஸ்ரே பரிசோதனை மேற்கொண்டனர். அப்போது தான், சுங்க அதிகாரிகளுக்கு கடும் அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது. தான்சானியா நாட்டைச் சேர்ந்த நபர், கேப்சூல்களை விழுங்கி இருப்பது தெரிய வந்தது. தொடர்ந்து, அவருக்கு இனிமா கொடுத்து வயிற்றில் உள்ள கேப்சூல்களை கொஞ்சம் கொஞ்சமாகவும் அதிகாரிகள் வெளியேற்றினர்.
மொத்தமாக, அவரது வயிற்றில் இருந்து 86 கேப்சல்கள் வெளியேற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அதற்குள் சுமார் ஒன்றே கால் கிலோ மதிப்பிற்கு போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் சர்வதேச மதிப்பு, சுமார் 8.86 கோடி ஆகும்.
அந்த நபரை கைது செய்த அதிகாரிகள், அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவர் எந்த கடத்தல் கும்பலை சேர்ந்தவர் என்பது பற்றியும், யார் வழியாக இவர் சென்னை வந்தார் என்பது பற்றியும் தொடர்ந்து, தீவிரமாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மற்ற செய்திகள்
