ரயில் பயணங்களில்... லைட் போட்டால் அபராதம்... பாட்டு கேட்டால் நடவடிக்கை!
முகப்பு > செய்திகள் > இந்தியாரயிலில் பயணம் செய்யும் போது சத்தமாக பாட்டு கேட்பதற்கும், செல்போனில் சத்தமாக பேசுவதற்கும் தடை விதித்து ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

ரயிலில் பயணிப்பவர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை தருவதாகவே உணர்வார்கள். ஜன்னல் ஓர காற்று, தடதடவென்று செல்லும் ரயிலில் பலமனிதர்களை சந்தித்து நாள் முழுக்க அரட்டை அடித்து செல்வதை பார்க்கவே அற்புதமாய் இருக்கும். பேருந்தில் சென்றாலும் இந்த ஆனந்தம் கிடைக்குமா என்று சிலாகிப்பார்கள். பண்டிகை, விழா காலங்களில் சொந்த ஊர்களுக்கு குடும்பங்களுடன், நண்பர்களுடன் மகிழ்ச்சியாக பயணங்களுக்கு எப்போதும் ரயில் பயணம் ஏதுவாக இருக்கும்.
தற்போது ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு ரயில்வே நிர்வாகம் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இனிமேல் இதுபோன்று தான் பயணிக்க வேண்டும். பாட்டுப் பாடிக்கொண்டு, சாப்பிட்டுக்கொண்டு பயணிப்பதை தவிர்க்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளது. சக ரயில் பயணிகளுக்கு பயணத்தை மிகவும் வசதியாகவும், இனிமையானதாகவும் மாற்ற, இந்திய ரயில்வே புதிய விதிகளை உருவாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.
புதிய விதிகள்
பயணம் செய்யும்போது சத்தமாகப் பேசினாலோ அல்லது சத்தமாக இசையை வாசித்தாலோ பிடிபடும் பயணி மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. குறிப்பாக இரவு பத்து மணிக்கு மின்விளக்குகளை எரியவிடவும் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்படவுள்ளன. பயணிகளுக்கு தொந்தரவு ஏற்பட்டால், ரயில் ஊழியர்களே பொறுப்பாவார்கள். இதுதொடர்பாக ரயில்வே அமைச்சகத்துக்கு எக்கச்சக்க புகார்கள் வந்ததால், இந்த விதிமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
அதிரடி நடவடிக்கை
ரயில்வே போலீஸார், டிக்கெட் பரிசோதகர்கள், உதவியாளர்கள் மற்றும் கேட்டரிங் உள்ளிட்ட ரயில்வே ஊழியர்கள், பயணிகளை ஒழுங்கையும் கண்ணியமான பொது நடத்தையையும் கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், ரயில் பயணிகளுக்கு சங்கடமான சூழலை ஏற்படுத்துவதை தவிர்க்கவே இதுபோன்ற நடவடிக்கை என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கவலை
இரவு நேரத்தில் இயர் போன் இல்லாமல்,மற்றவர்களை தொந்தரவு செய்யும் வகையில் இசையைக் கேட்டாலோ அல்லது சத்தமாக தொலைபேசியில் பேசுவதை தவிர்ப்பது நல்லது என குறிப்பிட்டுள்ளது. சாதாரணமாக ரயில் பயணத்தில் பாட்டு கேட்பது, செல் போனில் பேசுவது இயல்பான ஒன்று. இதை செய்யக்கூடாது என்று ரயில்வே துறை அறிவித்திருப்பது பொதுமக்களை கவலையில் ஆழ்த்தியிருக்கிறது.

மற்ற செய்திகள்
