விமானத்துல விடாம அழுதுகிட்டே இருந்த குழந்தை... பயணிகள் செஞ்ச ஸ்வீட் வைத்தியம்.. வைரலாகும் க்யூட் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > உலகம்துபாயில் இருந்து கிளம்பிய ஃப்ளை துபாய் விமானத்தில் பயணித்த அனைவரும் அழுதுகொண்டே வந்த சிறுவனை சமாதானப்படுத்த பாடல் ஒன்றினைப் பாடியிருக்கிறார்கள். இந்த க்யூட் வீடியோ தற்போது சமூக வலைத் தளங்களில் வைரலாக பரவிவருகிறது.

இனி ரஷ்யாவை நம்ப முடியாது.. இங்கிலாந்து அதிபர் எடுத்த முக்கிய முடிவு.. அதிர்ச்சியில் உலக நாடுகள்..!
அழுத குழந்தை
குழந்தைகளை சமாளிப்பது என்பது ரொம்பவே சிரமமான காரியம் தான். அதுவும் பயணத்தின் நடுவே அவர்கள் அழ ஆரம்பித்தால் என்ன செய்வது என்று தெரியாமல் பலரும் தடுமாறுவதை நாம் பார்த்திருப்போம். அப்படி துபாயில் இருந்து அல்பேனியா நாட்டிற்கு பறந்து கொண்டிருந்த ஃப்ளை துபாய் விமானத்தில் வினோத சம்பவம் ஒன்று நடந்திருக்கிறது.
அழுகை
இந்த விமானத்தில் பயணித்த சிறுவன் ஒருவன் விடாமல் அழுதிருக்கிறான். இதனால் கவலை அடைந்த சிறுவனின் தந்தை சமாதான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார். ஆனால், அவரது முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. வேறு வழி இல்லாமல் சிறுவனை தூக்கிக்கொண்டு நடந்திருக்கிறார். ஆனாலும் பையன் அழுகையை விட்டபாடில்லை. இதனை சக பயணிகள் அனைவரும் கவனித்தபடி இருந்திருக்கின்றனர்.
பாடல்
இதனை அடுத்து மகனை சமாதானப்படுத்த பேபி ஷார்க் (Baby Shark) என்னும் பிரபல அனிமேஷன் பாடலை தந்தை பாடி இருக்கிறார். அப்போது அதனை பார்த்துக்கொண்டிருந்த விமானத்தில் பயணித்த நபர்கள் அனைவரும் சேர்ந்து Baby Shark பாடலை ஒரே தாளத்தில் பாடியிருக்கின்றனர். இந்த ஸ்வீட் சம்பவத்தை ஒருவர் வீடியோவாக எடுத்து வெளியிட்டிருக்கிறார்.
சிறுவன் ஒருவனை சமாதானப்படுத்த விமானத்தில் பயணித்த அனைவரும் Baby Shark பாடலை பாடும் இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவிவருகிறது. 'இந்த வாரத்தில் கண்ட மிகச்சிறந்த வீடியோ இதுதான்' எனவும் 'அருமையான மக்கள்' எனவும் நெட்டிசன்கள் இந்த வீடியோவிற்கு கமெண்ட் போட்டு வருகிறார்கள்.
"இன்னும் 30 வருஷம் வாழணும்.." பிளான் போட்டிருந்த வார்னே.. கடைசில எல்லாம் தலைகீழ மாறிடுச்சு..

மற்ற செய்திகள்
