நடுவானத்துல திடீர்னு திறந்த விமானத்தின் கதவு.. 20 நிமிஷம் உயிரை கையில் பிடிச்சிக்கிட்டு பயணிகள் செஞ்ச காரியம்..
முகப்பு > செய்திகள் > உலகம்பிரேசில் நாட்டில் நடுவானில் பயணித்துக் கொண்டிருந்த விமானம் ஒன்றின் கதவு திடீரென திறந்ததால், பயணிகளே கதவை பிடித்துக்கொண்டு பயணித்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.

கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி, பிரேசில் நாட்டின் ஜோர்டாவோவில் இருந்து விமானம் ஒன்று புறப்பட்டிருக்கிறது. இந்த விமானத்தில் 15 - 21 பயணிகள் வரை இருந்ததாக தெரிகிறது. ரியோ பிராங்கோவை நோக்கி விமானம் சென்று கொண்டிருந்த போது திடீரென விமானத்தின் கதவு திறந்திருக்கிறது. இதனால் பயணிகள் அதிர்ச்சியில் உறைந்துபோயினர்.
விமானத்தின் நடுவே பொருத்தப்பட்டிருந்த சப்போர்ட் கேபிள்களில் ஒன்று துண்டிக்கப்பட்டதால் விமான கதவு திறந்திருக்கிறது. மேலும், விமானத்தின் கைப்பிடி எஞ்சின் ப்ரொபெல்லர்களில் பட்டு பலத்த சத்தமும் எழுந்திருக்கிறது.
20 நிமிட பயணம்
விமானத்தின் கதவு திறந்ததும் துரிதமாக செயல்பட்ட அதில் இருந்த பயணிகள், கதவை பிடித்து மூட முயற்சி செய்திருக்கின்றனர். ஆனால், கேபிள் துண்டிக்கப்பட்டதால் கதவை மூட முடியவில்லை. அதன் காரணமாக, 20 நிமிடங்களுக்கு கதவை பிடித்தபடியே பயணித்திருக்கின்றனர் அதிலிருந்த பயணிகள். ஒருவழியாக அருகில் இருந்த விமான நிலையத்தில் விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டிருக்கிறது.
அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் பயணிகள் எவருக்கும் காயம் ஏற்படவில்லை. ரியோ பிராங்கோ ஏரோடாக்ஸி என்ற நிறுவனத்துக்கு சொந்தமான இந்த விமானத்தில் ஏற்பட்ட விபத்து குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.
விசாரணை
இதற்கு பதிலளித்த ரியோ பிராங்கோ ஏரோடாக்ஸி நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர், விமான விபத்துக்களுக்கான விசாரணை மற்றும் தடுப்பு மையமான CENIPA இந்த சம்பவம் குறித்து விசாரணையில் இறங்கியுள்ளதாக தெரிவித்தார்.
நடுவானில் விமானத்தின் கதவு திறந்ததும் 20 நிமிடங்களுக்கு பயணிகள் கதவை பிடித்துக்கொண்டு பயணித்த சம்பவம் பலரையும் திடுக்கிட வைத்துள்ளது.

மற்ற செய்திகள்
