2 வேற வேற பிளைட்.. ஒரே மாதிரி கடத்தல் பிளான்.. சென்னை விமான நிலையத்தில் அதிரடி காட்டிய கஸ்டம்ஸ் அதிகாரிகள்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை விமான நிலையத்தில் தங்கம் கடத்தி வந்ததாக இரண்டு பேரை சுங்கத் துறை அதிகாரிகள் நேற்று கைது செய்திருக்கின்றனர். இரண்டு வெவ்வேறு விமானங்கள் வழியாக வெவ்வேறு நாடுகளில் இருந்து சென்னை வந்த இருவரும் ஒரே மாதிரி கடத்தலில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

மகனை அடக்கம் செய்த சில நாளில்.. மருமகளின் செல்போனை பார்த்து ஆடிப்போன மாமனார்.. நடுரோட்டில் மறியல்
முதலாவதாக துபாயை மையமாகக்கொண்டு இயங்கிவரும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானத்தில் (EK-542) நேற்று காலை 2. 10 மணிக்கு துபாயில் இருந்து சென்னை திரும்பிய ஜமீம் கமால் நாசர் என்பவரை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்திருக்கின்றனர். அப்போது அவரது உள்ளாடைப் பாக்கெட்டில் வெள்ளை நிற பட்டர் பேப்பரால் சுற்றப்பட்ட பொருளை கைப்பற்றியிருக்கின்றனர்.
1.773 கிலோ கிராம் எடை கொண்ட அந்த பேப்பருக்குள் 1.530 கிலோ எடை கொண்ட தங்கத்தினை நாசர் மறைத்து கடத்திவந்திருப்பது தெரியவந்திருக்கிறது. இதனையடுத்து ஜமீம் கமால் நாசரை சுங்கத் துறை அதிகாரிகள் கைது செய்திருக்கின்றனர். முதற்கட்ட விசாரணையில் 35 வயதான இவர் சென்னையில் வசித்து வருவதும் இவருடைய தந்தை பெயர் நாசர் என்பதும் தெரியவந்திருக்கிறது.
அதேபோல, நேற்று அதிகாலை 1.30 மணிக்கு இலங்கையின் கொழும்பு நகரில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் மூலமாக (UL-125) சென்னை திரும்பிய சையத் அபுதாஹீர் என்பவரை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்திருக்கின்றனர்.
அப்போது அவருடைய உள்ளாடைப் பாக்கெட்டில் வெள்ளை நிற பட்டர் பேப்பரால் சுற்றப்பட்ட பொருளை கைப்பற்றியிருக்கின்றனர். 1.451 கிலோ கிராம் எடை கொண்ட அந்த பேப்பருக்குள் 1.236 கிலோ எடை கொண்ட தங்கத்தினை அவர் கடத்தி வந்திருப்பது தெரியவந்திருக்கிறது. இதனையடுத்து சென்னை விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள் சையத் அபுதாஹீரை கைது செய்தனர். மதுரையில் வசித்துவரும் 38 வயதான சையதின் தந்தை பெயர் ஜெபருல்லா கான் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
1.20 கோடி மதிப்புள்ள தங்கம்
இந்த தங்க கடத்தல் குறித்து சுங்கத்துறை அளித்துள்ள அறிக்கையில் நேற்று கைது செய்யப்பட்ட இருவரிடம் இருந்தும் மொத்தமாக 2.766 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும் இதன் மதிப்பு 1.20 கோடி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் இருந்து சென்னைக்கு தங்கம் கடத்திவந்த இருவர் மீதும் சுங்கச் சட்டம் 1962 ன் படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்த கடத்தல் தொடர்பாக மேற்கட்ட விசாரணைகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இரண்டு வெவ்வேறு நாடுகளில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்த இருவர் ஒரே மாதிரி பாணியில் தங்க கடத்தலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டிருப்பது தற்போது வைரலாக பேசப்பட்டு வருகிறது.

மற்ற செய்திகள்
