‘இனி இது ரொம்ப ஈஸி’.. ‘வாட்ஸ்அப்பின் புதிய அப்டேட்டால்’.. ‘உற்சாகத்தில் பயனாளர்கள்’..

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்

By Saranya | Sep 20, 2019 01:35 PM

வாட்ஸ்அப் செயலியில் ம்யூட் செய்யப்பட்ட ஸ்டேட்டஸ் அப்டேட்டுகளை முற்றிலுமாக மறைக்கும் வகையில் புதிய வசதி அறிமுகமாக உள்ளது.

WhatsApp users on Android can now hide muted status update

உலக அளவில் கோடிக்கணக்கான மக்களால் பயன்படுத்தப்படும் பிரபல செயலியான வாட்ஸ்அப் பயனாளர்களைக் கவரும் வகையில் அடுத்தடுத்து பல அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. அந்த வரிசையில் அடுத்ததாக வாட்ஸ்அப்பில் ம்யூட் செய்யப்பட்ட ஸ்டேட்டஸ் அப்டேட்டுகளை முற்றிலுமாக மறைக்கும் வசதி அறிமுகமாக உள்ளது.

கடந்த சில மாதங்களாகவே இந்த புதிய அப்டேட் குறித்து சோதனை முயற்சி செய்து வந்த வாட்ஸ்அப் விரைவில் இதை அறிமுகம் செய்ய உள்ளது. வாட்ஸ்அப்பின் புதிய பீட்டா வெர்ஷனில் வழங்கப்படும் இந்த அப்டேட்டால் ஆண்ட்ராய்டு பயனாளர்கள் இனி மியூட் செய்யப்பட்ட எண்களை எளிதாக கையாள முடியும் எனக் கூறப்படுகிறது.

Tags : #WHATSAPP #NEW #UPDATE #STATUS #MUTE #ANDROID #IOS #USERS #SMARTPHONES