'10 நாள்ல கல்யாணம்!'.. கடிதத்தில், ‘இப்படி’ எழுதி வைத்துவிட்டு ‘மணமகன்’ செய்த பகீர் செயல்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொடைக்கானலில் 10 நாட்களில் திருமணம் ஆகவிருந்த நிலையில், இளம் மணமகன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கொடைக்கானல் அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவருக்கு 3 மாதங்களுக்கு முன்பு திருமண நிச்சயம் ஆன நிலையில் இன்னும் 10 நாட்களில் திருமணம் நடைபெறவிருந்தது. இந்நிலையில் செல்வம் கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு தனது வீட்டுக்குள்ளேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றிய தனது தற்கொலைக் கடிதத்தில், தான் மன உளைச்சலால் தற்கொலை செய்து கொள்வதாகக் குறிப்பிட்டுள்ள செல்வம், அதேசமயம் தனது மரணத்திற்கு யாரும் காரணமல்ல என்றும் குறிப்புகளை எழுதிவைத்துள்ளார். போலீஸார் இதுபற்றி விசாரித்து வருகின்றனர்.
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

மற்ற செய்திகள்
