‘சாத்தான்குளம் இரட்டைக் கொலையில் நீதியை நிலைநாட்ட போராடும்...’ - நடிகர் கமல்ஹாசனின் வைரல் ட்வீட்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்அண்மையில் தூத்துக்குடி சாத்தான்குளம் தந்தை ஜெயராஜ் மற்றும் மகன் பெனிக்ஸ் இருவரும் காவலர்களுடனான வாக்குவாதம் காரணமாக விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.
![kamalhaasan supports magistrate, constable in sathankulam case kamalhaasan supports magistrate, constable in sathankulam case](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/tamilnadu/kamalhaasan-supports-magistrate-constable-in-sathankulam-case.jpg)
பின்னர் அவர்கள் இருவரும், அடுத்தடுத்து உயிரிழந்ததை அடுத்து, இது குறித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன்வந்து விசாரிக்கத் தொடங்கியது. அதன் ஒரு பகுதியாக, இந்த சம்பவம் குறித்த முக்கிய ஆவணங்களையும், நேரடி சாட்சியின் வாக்குமூலத்தினையும் மேஜிஸ்திரேட் பாரதிதாசன் சேகரித்து நேற்றைய தினம் மதுரை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.
அதுமட்டுமல்லாமல், காவல்துறையினரின் விசாரணையின்போது இரவு முழுவதும் லத்தியால் ரத்தம் சொட்ட சொட்ட அடித்ததை தான் பார்த்ததாகவும் தலைமைக் காவலர் ரேவதி சாட்சி கூறியுள்ளார்.
இந்நிலையில் இதுகுறித்து, தனது ட்விட்டரில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவருமான கமல்ஹாசன், “சாத்தான்குளம் இரட்டைக் கொலையில் நீதியை நிலைநாட்ட போராடிக் கொண்டிருக்கும் மேஜிஸ்திரேட் பாரதிதாசனுக்கும், அவருக்கு உறுதுணையாக நிற்கும் மதுரை உயர்நீதி மன்றத்திற்கும்,
சாத்தான்குளம் இரட்டைக் கொலையில் நீதியை நிலைநாட்ட போராடிக் கொண்டிருக்கும் மேஜிஸ்திரேட் பாரதிதாசனுக்கும், அவருக்கு உறுதுணையாக நிற்கும் மதுரை உயர்நீதி மன்றத்திற்கும், மனசாட்சியோடு சாட்சி சொன்ன காவலர் ரேவதிக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.
— Kamal Haasan (@ikamalhaasan) June 30, 2020
மனசாட்சியோடு சாட்சி சொன்ன காவலர் ரேவதிக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)