பரபரப்பு!! கடலூர் வந்த TTF வாசன்.. சூழ்ந்து கொண்டு ஆர்ப்பரித்த ரசிகர்கள்.. ..
முகப்பு > செய்திகள் > தமிழகம்கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் TTF வாசன். இவர் மக்கள் மத்தியில் அதிகம் பிரபலம் ஆனவர்.

இதற்கு காரணம், தனது யூடியூப் பக்கத்தில் விலை உயர்ந்த தனது பைக்கில் நீண்ட தூரம் பயணம் செய்து இது தொடர்பான வீடியோக்களை வெளியிட்டு வருவதால், பைக்கில் பயணம் செய்ய விரும்பும் பலரும் இவரை பின்பற்றி வருகின்றனர்.
அதிக பிரபலமாக இருக்கும் TTF வாசன், சமீபத்தில் சில பிரச்சனைகளில் சிக்கி இருந்தார். தொடர்ந்து, தற்போது அவை அனைத்திலும் இருந்து மீண்டு வந்த TTF வாசன், மீண்டும் வழக்கம் போல பைக்குகளில் பயணம் செய்து வீடியோ வெளியிட்டும் வருகிறார்.
அப்படி ஒரு சூழலில், சமீபத்தில் லடாக் பகுதியில் TTF வாசன் பயணம் மேற்கொண்டிருந்த வீடியோக்கள், பெரிய அளவில் கவனம் ஈர்த்திருந்தது. அதே போல, டிரக் ஒன்றில் ஏற்றப்பட்ட அவரது பைக், குறித்த தினத்திற்குள் திரும்ப வராததால் திருட்டு போயிருக்கும் என கருதி, அவர் வெளியிட்டிருந்த வீடியோவும் பெரிய அளவில் பரபரப்பை உண்டு பண்ணி இருந்தது.
இதனையடுத்து, வேறு சில இடங்களில் பொருட்களை இறக்க வேண்டி இருந்ததால், TTF வாசன் பைக் அவரது கைக்கு வந்து சேர தாமதமானதும் தெரிய வந்தது. பத்திரமாக பைக் கிடைத்ததை குறிப்பிட்டு ஆனந்தத்துடன் வீடியோவையும் பகிர்ந்திருந்தார் TTF வாசன். இதனைத் தொடர்ந்து, தற்போது நீண்ட பயணம் முடித்து விட்டு மீண்டும் சொந்த ஊருக்கு சமீபத்தில் வாசன் திரும்பி இருந்தார்.
இந்த நிலையில், கடலூர் மாவட்டத்தில் TTF வாசன் வந்த போது நடந்த விஷயம், அதிக பரபரப்பை உண்டு பண்ணி உள்ளது.
கடலூர் புதுப்பாளையம் அருகே TTF வாசன் ஒரு நிகழ்ச்சிக்காக வந்ததாக தகவல்கள் கூறுகின்றது. இந்த தகவல் அறிந்ததும் அப்பகுதியில் வாசனை காண ஏரளாமானோர் கூடி உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

மற்ற செய்திகள்
