"என் பைக் தொலைஞ்சு போச்சு, PRAY பண்ணுங்க".. லடாக் போன TTF வாசன் பகிர்ந்த வீடியோ!!.. பரபரப்பு பின்னணி!!
முகப்பு > செய்திகள் > இந்தியாகோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் TTF வாசன். இவர் மக்கள் மத்தியில் அதிகம் பிரபலம் ஆனவர்.
![TTF Vasan new video about his missing bike in ladakh TTF Vasan new video about his missing bike in ladakh](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/india/ttf-vasan-new-video-about-his-missing-bike-in-ladakh.jpg)
Also Read | கல்யாணமாகி 10-வது நாள்.. மாப்பிள்ளைக்கு ஷாக் கொடுத்த மணமகள்.. கோபத்தில் பெண்வீட்டார் செஞ்ச பகீர் காரியம்...!
இதற்கு காரணம், தனது யூடியூப் பக்கத்தில் விலை உயர்ந்த தனது பைக்கில் நீண்ட தூரம் பயணம் செய்து இது தொடர்பான வீடியோக்களை வெளியிட்டு வருவதால், பைக்கில் பயணம் செய்ய விரும்பும் பலரும் இவரை பின்பற்றி வருகின்றனர்.
அதிக பிரபலமாக இருக்கும் TTF வாசன், சமீபத்தில் சில பிரச்சனைகளில் சிக்கி இருந்தார். தொடர்ந்து, தற்போது அவை அனைத்திலும் இருந்து மீண்டு வந்த TTF வாசன், மீண்டும் வழக்கம் போல பைக்குகளில் பயணம் செய்து வீடியோ வெளியிட்டும் வருகிறார்.
இந்த நிலையில், பல லட்சம் மதிப்புள்ள பைக் காணாமல் போனதாக TTF வாசன் வெளியிட்ட வீடியோ, அதிக பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக அவர் வெளியிட்டிருந்த வீடியோவில் உள்ள தகவலின் படி, தனது நண்பர் ஒருவருடன் லடாக் சென்றுள்ளார் TTF வாசன். கவாசகி இசட் 900 என்ற பைக்கில் சென்ற அவர், ட்ராஸ் என்னும் பகுதிக்கு செல்ல முயன்றுள்ளார். ஆனால், ட்ராஸ் பகுதிக்கு செல்லும் பாதை கரடுமுரடாக இருக்கும் என்பதால், தனது ஹோட்டல் அறையில் இருந்த ஒருவரின் உதவியோடு தனது பைக்கை ட்ரக் ஏற்றி அனுப்பியும் வைத்துள்ளார் வாசன்.
இதனைத் தொடர்ந்து , கார் ஒன்றின் மூலம் வாசனும் பயணம் மேற்கொண்டுள்ளார். ஹோட்டல் மூலம் ட்ரக் புக் செய்ததால் பைக் கொண்டு சென்றதன் பெயரில் அவருக்கு எந்தவித சந்தேகமும் வரவில்லை என் தெரிகிறது. ட்ராஸ் பகுதிக்கு காரில் சென்ற TTF வாசன், பைக் வராததால் டிரக் ஓட்டுனருக்கு தொடர்பு கொண்டு கேட்டுள்ளார். ஒன்றிரண்டு நாட்களில் வந்து விடும் என தெரிவித்த ஓட்டுநர் சொல்ல, பின்னர் தொடர்பு கொண்ட போது அவர் போன் எடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. தொடர்ந்து பலமுறை முயற்சித்தும் எந்த பதிலும் இல்லை என்றும் தெரிகிறது.
பைக் ஏற்றிக் கொண்டு வந்த ட்ரக்கில் இருந்து எந்த பதிலும் வராத காரணத்தினால் இது தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் TTF வாசன். "எனது பைக்கை காணவில்லை எடுத்துட்டு போய்ட்டாங்க, போன் பண்ணாலும் சுவிட்ச் ஆப்ன்னு வருது. இருந்தாலும் எனக்கு நம்பிக்கை இருக்கும் கெடச்சுரும்ன்னு. எனக்காக Pray பண்ணுங்க." என TTF வாசன் பேசும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் வைரலாகி வருகிறது.
சுமார் 10 லட்சம் ரூபாய் வரை மதிப்புள்ள TTF வாசனின் பைக் காணாமல் போன விஷயம், இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)