'பைக் ரேஸில் ஈடுபட்ட இளைஞர்கள்'... 'பைக்கிலிருந்து கீழே விழுந்து நேர்ந்த சோகம்'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Sangeetha | Jun 02, 2019 06:32 PM
சென்னை மெரினா கடற்கரையில் வேகமாக வந்த இருசக்கர வாகனத்தில் பின்னால் அமா்ந்து பயணித்த இளைஞர் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள காமராஜா் சாலையில் இளைஞா்கள் சிலா் பைக் ரேசில் ஈடுபட உள்ளதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் நேற்று இரவு காவல் துறையினா் காமராஜா் சாலையில் தடுப்புகளை ஏற்படுத்தி தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது அங்கு சில இளைஞா்கள் பைக் ரேசில் ஈடுபட்டனா். மேலும் பைக் சாகசங்களிலும் ஈடுபட்டனா். அவா்களை காவல் துறையினா் எச்சரித்து அனுப்பினா். இந்நிலையில் இன்று காலை அதே பகுதியில் இளைஞா்கள் சிலா் பைக்கில் வேகமாக சென்றுள்ளனா். அப்போது வேகமாக வந்த இருசக்கர வாகனத்தில் இருந்து இளைஞா் ஒருவா் கீழே விழுந்தாா்.
மேலும் பைக்கை ஓட்டி வந்த இளைஞரும் கீழே விழுந்து படுகாயமடைந்தாா். இந்த விபத்தில் பின்னால் அமா்ந்திருந்த இளைஞா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். வாகனத்தை ஓட்டி வந்த நபா் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளாா்.
சாலை விதிகள் குறித்து காவல் துறையினா் அவ்வபோது அறிவுரைகளையும், விழிப்புணா்வு நிகழ்ச்சிகளையும் வழங்கி வருகின்றனா். இருப்பினும் விபரீதங்களை அறியாமல் இளைஞா்கள் சிலா் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதால் ரேசில் ஈடுபடுபவா்கள் மட்டுமின்றி ஏதும் அறியாமல் சாலையில் செல்லும் பொதுமக்களும் பாதிக்கப்பட்டு பலரது எதிா்காலம் பாதிக்கப்படுகிறது.
