சென்னையில் பட்டப்பகலில் பெண்ணிடம் நடந்த வழிப்பறி..! பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | May 31, 2019 12:43 PM

நடந்து சென்ற பெண்ணிடம் பைக்கில் வந்த இருவர் செல்போனை பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Cell phone robbers arrested in Chennai

சென்னையில் வழிப்பறியில் ஈடுபடும் குற்றங்கள் அதிகமாக நடைபெற்று வரும் நிலையில், சிந்தாரிப்பேட்டை பகுதியில் ஒரே நாளில் மூன்று பெண்களின் செல்போன்களை இரு சக்கரவாகனத்தில் வந்த இருவர் பறித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலிஸார், தனிப்படை அமைத்து தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

மேலும் தொடர் வழிப்பறி சம்பவங்கள் நடந்த இடங்களில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து பார்த்துள்ளனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் செல்போனை பறித்து செல்லும் காட்சிகள் வீடியோவில் பதிவாகியிருந்துள்ளது. மேலும் வழிப்பறியில் ஈடுபட்டவர்களின் முகம் தெளிவாக தெரிந்ததால் போலிஸார் உடனடியாக அவர்களை கைது செய்துள்ளனர்.

இதனை அடுத்து போலிஸார் நடத்திய விசாரணையில் வழிப்பறியில் ஈடுபட்டவர்கள் ஆவடியைச் சேர்ந்த சுந்தர்ராஜ் மற்றும் வியாசர்பாடியைச் சேர்ந்த அஜித் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர்களிடம் இருந்த செல்போன்கள் மற்றும் இருசக்கரவாகனத்தைக் கைப்பற்றிய போலிஸார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : #CHENNAI #ROBBERY