'குழந்தையின் வாயில் திடீரென தோன்றிய அடையாளம்'.. 'பதறிய தாயின் வைரலாகும் பேஸ்புக் பதிவு!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Sangeetha | Jun 02, 2019 05:33 PM

தனது குழந்தையின் வாயில் திடீரென ஏற்பட்ட கருப்பு அடையாளத்தால், தாய் ஒருவர் பதறிப்போய் மருத்துவமனைக்கு சென்று, பின்னர் அது வெறும் அட்டை என்று தெரியவந்துள்ளதால் குழந்தையின் தாய் நிம்மதி அடைந்துள்ளார். 

Mum embarrassed as she discovers what black mark in kid\'s mouth

டேரியன் டேப்ரீதா என்ற தாய், தனது குழந்தையின் வாயினுள் கருப்பு நிறத்தில் திடீரென அடையாளத்தை பார்த்துள்ளார். அதனை அகற்ற முயன்று தோற்றதால் மருத்துவமனைக்கு குழந்தையை தூக்கிச் சென்றுள்ளார். அங்கு குழந்தையை பரிசோதித்த செவிலியர், அது என்ன அடையாளம் என்று புரியாமலேயே குழம்பியுள்ளார். அதனை நீக்கவும் முயற்சி செய்துள்ளார்.  

குழந்தையை பின்னர் மருத்துவர்கள் பரிசோதித்து, அந்த அடையாளம் பிறந்ததில் இருந்தே இருக்கலாம். தற்போது பெரியதாக மாறியிருக்கலாம் என்று கூறியுள்ளனர். திடீரென இந்த கருப்பு அடையாளம் தோன்றியதை உறுதியாக நம்பிய டேரியன் டேப்ரீதா, மருத்துவர்களின் விளக்கத்தை ஏற்காமல் வீட்டுக்கு குழந்தையை கூட்டி வந்துள்ளார். 

சிறிது நேரத்திற்குப் பிறகு, கருப்பு அடையாளத்தைச் சுற்றிலும் வெள்ளையான காகிதம் போன்று இருந்ததால், சந்தேகமடைந்து தீவிரமாக அதனை அகற்ற முயற்சி செய்ததில், அது வெறும் காகித அட்டை என்பது தெரிய வந்துள்ளது.  தனது அனுபவத்தை பேஸ்புக் பக்கத்தில் டேரியன் பதிவிட, அது வைரலாக மாறியது. 

தற்போதுவரை அந்த பேஸ்புக் பதிவுக்கு 24 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கருத்து தெரிவித்துள்ளனர்.  குழந்தையின் கையில் அட்டைப்பெட்டிகளை கொடுக்காதீர்கள் என்று அவருக்கு அறிவுரைகளையும் பலர் வழங்கியுள்ளனர். 

 

Tags : #MOTHER #KID